For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.. தொடரும் இந்தியாவின் அதிரடி.. அதிர்ச்சியில் சீனா.. திடீர் அறிக்கை

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் செயலிகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட தடைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியா - சீனாவின் உறவு மோசமாக பாதிக்கும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இனி இந்த பிரச்னையை தீர்க்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

அதிலும் எல்லையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் 22 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எங்களை பார்த்து அப்படி சொல்வதா? மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை!எங்களை பார்த்து அப்படி சொல்வதா? மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை!

இன்று திடீர் திருப்பம்

இன்று திடீர் திருப்பம்

இந்த நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார். முக்கியமாக இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்களிடம் அதிரடியாக உரையாற்றினார். மேலும் எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்தார்.

இந்தியா அதிர்ச்சி

இந்தியா அதிர்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன்தான் டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்தது. சீனாவிற்கு இந்தியா இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிலையில் சீனாவின் செயலிகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட தடைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியா - சீனாவின் உறவு மோசமாக பாதிக்கும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சீனா அறிக்கை

சீனா அறிக்கை

சீனாவின் வெளியுறவுத்துறை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவின் சேவைகளுக்கு இந்தியா செயற்கையான தடைகளை விதித்து வருகிறது. இரண்டு நாட்டு உறவை இது பாதிக்கும். இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். எல்லையில் நடக்கும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

சீனாவில் மீண்டும் எங்கள் செயலிகள் செயல்பட பேசி வருகிறோம். இந்தியா இது தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தை ஏற்க முடியாது. இந்தியாவில் சீனாவின் வியாபாரம் மற்றும் வணிகங்களை தொடர சீனா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.இந்தியாவில் எங்கள் வியாபாரத்தை செய்யும் உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம், என்று சீனா கூறியுள்ளது.

English summary
Artificial Blockage will affect two countries relationship says China on India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X