For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுங்கள்..33 கோடி பயனாளிகளுக்கு மெசேஜ் அனுப்பிய டிவிட்டர்.. ஏன்?

டிவிட்டரில் கணக்கு வைத்து இருக்கும் 33 கோடி மக்களின் பாஸ்வேர்டை மாற்ற சொல்லி அந்த நிறுவனம் எல்லோருக்கும் தனித்தனியாக மெசேஜ் அனுப்பி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டிவிட்டரில் பாஸ்வேர்டை மாற்ற சொல்ல டிவிட்டர் நிறுவனம் வைக்கும் கோரிக்கை- வீடியோ

    நியூயார்க்: டிவிட்டரில் கணக்கு வைத்து இருக்கும் 33 கோடி மக்களின் பாஸ்வேர்டை மாற்ற சொல்லி அந்த நிறுவனம் எல்லோருக்கும் தனித்தனியாக மெசேஜ் அனுப்பி உள்ளது.

    அதோடு பொதுவாக ஒரு டிவிட் செய்து இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளது.

    இந்த 33 கோடி பேரின் பாஸ்வேர்டும் கசிந்துவிட்டதாக கூறியுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் வெளியே செல்லவில்லை, டிவிட்டர் சர்வரில்தான் இருக்கிறது என்றும் நிம்மதி அளித்துள்ளது.

    பொதுவாக என்ன நடக்கும்

    பொதுவாக என்ன நடக்கும்

    பொதுவாக நாம் சமூக வலைத்தளங்களில் ஒருவர் பாஸ்வேர்ட் கொடுத்தால், அதை வேறு மாதிரி என்கிரிப்ட் செய்து அந்த சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பதிவேற்றிக் கொள்ளும். நாம் ''சிவாஜி தி பாஸ்'' என்று பாஸ்வேர்ட் கொடுத்தால், அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், வேறு மாதிரி மாற்றி தங்கள் சர்வரில் பதிவேற்றிக் கொள்ளும். தகவல்களை ஹேக் செய்து திருடாமல் இருக்க இப்படி செய்யப்படும்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    ஆனால் டிவிட்டரில் இதில் ஒரு பிரச்சனை உருவாகி உள்ளது. அவர்கள் தங்கள் டிவிட்டர் தளத்தை அப்டேட் செய்யும் போது, இதில் மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது, இதனால் நாம் கொடுக்கும் ''சிவாஜி தி பாஸ்'' பாஸ்வேர்ட் அப்படியே உள்ளது உள்ளபடியே அவர்களுக்கு சேவ் ஆகியுள்ளது. இதனால், டிவிட்டரில் வேலை செய்யும் யார் வேண்டுமானாலும் நமது பாஸ்வேர்டை பார்க்க முடியும். யாராவது ஹேக் செய்தால் எளிதாக தகவலை திருடலாம்.

    மொத்தமாக மாற்றினார்கள்

    இதனால்தான் 33 கோடி பேரின் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என்று டிவிட்டர் கூறியுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக வேகமாக 33 கோடி பேரின் பாஸ்வேர்டுகள் அவர்களது சர்வரில் அப்படியே பதிவாகி உள்ளது. இதனால் அவர்களுக்கு தனியாக பாஸ்வேர்டை மாற்ற சொல்லி மெசேஜ் சென்றுள்ளது, அதோடு பொதுவாக டிவிட்டர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து டிவிட் செய்துள்ளது.

    நாளுக்கு நாள் மோசம்

    நாளுக்கு நாள் மோசம்

    தற்போது சமூக வலைதங்களில் நாளுக்கு நாள் பாதுகாப்பு பிரச்சனை அதிகரித்து வருகிறது. முதலில் பேஸ்புக் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மூலம் நம்முடைய தகவலை எல்லாம் விற்றது. அதன்பின் டிவிட்டரும் இந்த பிரச்சனையில் சிக்கியது. தற்போது டிவிட்டர் அடுத்த பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    As a new Tech-quake, Twitter asks over 330 million users to change their password. They asked this, as a bug has decrypted all the encryptedpassword.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X