For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடியவே முடியாது.. பாக். தளபதியை சந்திக்க மறுத்த சவுதி சல்மான்.. சீனாவிற்கு விரையும் பாக் அதிகாரிகள்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சவுதி அரேபியாவுடன் ஏற்பட்ட திடீர் மோதலை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி அவசர அவசரமாக தற்போது சீனா சென்றுள்ளார். சீனாவுடன் உறவையும் புதுப்பிக்கும் வகையில் அவர் புறப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

    கைவிட்ட Saudi.. China- வை தேடி ஓடும் பாகிஸ்தான்

    தனது வெளியுறவு கொள்கையிலும், சர்வதேச உறவிலும் தற்போது மிகப்பெரிய ரிஸ்க்கை பாகிஸ்தான் எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு வாரி வாரி கடன்களை வழங்கி வந்த சவுதி அரேபியாவிடம் தற்போது அந்த நாடு மொத்தமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

    இஸ்லாமிய நாடுகளில் மிக முக்கியமான நாடாக பார்க்கப்படும் சவுதி அரேபியாவை மொத்தமாக பாகிஸ்தான் பகைத்துக் கொண்டு உள்ளது. இதற்கான அமைதி தூதுகள் எல்லாம் தோல்வி அடைந்த நிலையில், விரைவில் இரண்டு நாட்டு உறவு அதிகாரபூர்வமாக முறியும் என்று கூறுகிறார்கள்.

    சித்தி என அழைத்த கமலா ஹாரீஸ்.. அமெரிக்காவில் ராதிகாவின் சீரியலை டிரென்டாக்கிய தமிழர்கள்சித்தி என அழைத்த கமலா ஹாரீஸ்.. அமெரிக்காவில் ராதிகாவின் சீரியலை டிரென்டாக்கிய தமிழர்கள்

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    இந்த பிரச்சனை தொடங்கியது இந்த வருடம் அல்ல. கடந்த வருடம். காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட போதுதான் இந்த பிரச்னை தொடங்கியது. காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டது குறித்து சவுதி அரேபியா விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. ஓஐசி எனப்படும் இஸ்லாமிய நாட்களின் கூட்டமைப்பை கூட்டி சவுதி அரேபியா ஆலோசனை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

    பாகிஸ்தானின் இரண்டு திட்டம்

    பாகிஸ்தானின் இரண்டு திட்டம்

    இந்த கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்கவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் இரண்டு திட்டங்களை போட்டது. எப்படியாவது சவுதி அரேபியாவை இந்தியாவிற்கு எதிராக திருப்ப வேண்டும். இதற்காக சவுதி அரேபியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முயன்றது. ஆனால் பாகிஸ்தான் எவ்வளவு முயன்றும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச சவுதி அரேபியா மறுத்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் தனது இரண்டாவது திட்டத்தை களமிறக்கியது.

    திட்டம் இரண்டாம்

    திட்டம் இரண்டாம்

    இதில் இரண்டாவது திட்டம் என்றால், சவுதி அரேபியாவிற்கு எதிராக ஓஐசி நாடுகளை திருப்புவது. அதாவது சவுதி அரேபியா இல்லாமல் ஓஐசி நாடுகளின் கூட்டமைப்பு கூட்டி ஆலோசனை செய்வது. அதாவது இஸ்லாமிய நாடுகளை சவுதி அரேபியாவிற்கு எதிராக திருப்புவது. துருக்கி தலைமையில் இரான், கத்தார், மலேசியா ஆகிய நாடுகளை வைத்து புதிய குழுவை உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.

    என்ன முறிவு

    என்ன முறிவு

    இந்த விஷயம் சவுதி அரேபியாவிற்கு தெரிய வந்த நிலையில், மொத்தமாக சவுதி அரேபியா பாகிஸ்தான் உடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தது.பாகிஸ்தானுக்கு கொடுத்த கடனை எல்லாம் தற்போது சவுதி அரேபியா திருப்பி வாங்கி வருகிறது. இதற்காக பாகிஸ்தானின் ராணுவ தளபதி குமார் ஜாவேத் சவுதி அரேபியா சென்று சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அதுவும் கூட சவுதி அரேபியாவில் எடுபடவில்லை. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் இருக்கிறது.

    மறுத்துவிட்டார்

    மறுத்துவிட்டார்

    அதிலும் சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்கவே மறுத்துவிட்டார். எங்களுக்கு எதிராக பாகிஸ்தானை திரும்பியதை ஏற்க முடியாது. அதிலும் ஓஐசி நாடுகளை கூட்ட நினைத்ததை எல்லாம் ஏற்கவே முடியாது என்று அறிவித்துவிட்டார். இதனால் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உறவு மொத்தமாக முறிந்துவிட்டது என்று கூறுகிறார்கள் .

    சீனாவிற்கு சென்றார்

    சீனாவிற்கு சென்றார்

    இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தற்போது சீனாவிற்கு விரைந்து உள்ளார். சவுதி அரேபியா கைவிட்ட காரணத்தால் இனி சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஒரே நட்பு நாடாக மாறியுள்ளது. இதனால் தற்போது சீனாவின் அதிகாரிகள் உடன் குரேஷி சந்திப்பு நடத்தி இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க உள்ளார். சவுதியின் முடிவால் பாகிஸ்தானுக்கு தற்போது வேறு போக்கிடம் இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    கூறியது என்ன

    கூறியது என்ன

    இன்னொரு பக்கம் துருக்கி அதிகாரிகளையும் நேற்று குரேஷி சந்தித்தார். இதுவும் சவுதி அரேபியாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. சவுதி வேண்டாம் என்று கூறியதால், துருக்கி உடன் இணைய பாக் நினைக்கிறது. பாகிஸ்தான் அவசரப்பட்டு அடுத்தடுத்து முடிவுகளை எடுத்து வருகிறது. இதனால் மொத்தமாக உலக அளவில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    English summary
    As Saudi Salman says no to meet Pakistan major, Qureshi goes to China to refresh the relationship.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X