For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நபிகள் பற்றி தவறாக பேசிய பெண்.. தூக்கு தண்டனையை ரத்து செய்ததால் கலவரத்தில் குதித்த பாக். மக்கள்!

பாகிஸ்தானை உறைய வைத்த ஆசியா பிபி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை உறைய வைத்த ஆசியா பிபி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தற்போது பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் கிறிஸ்துவ மத பெண் ஆசியா பிபி. இவர் கடந்த 2009 இறுதியில் இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.

அதன்பின் 2010ல் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இவரது தூக்கு தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில், விடுதியில் இருக்க கூடாதா?- துரைமுருகன் எதிர்க்கட்சி தலைவரும் வேறு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில், விடுதியில் இருக்க கூடாதா?- துரைமுருகன்

என்ன நடந்தது

என்ன நடந்தது

ஆசியா பிபி, கடந்த 2009ல் வேலை பார்த்த அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார். அவர் தண்ணீர் கேட்டதற்கு அவருடன் வேலை பார்த்த பெண்கள், அவர் கிறுஸ்துவர் என்பதால் தண்ணீர் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து ஆசியா பிபி நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

தூக்கு தண்டனை

தூக்கு தண்டனை

இதை பற்றி அந்த அலுவலகத்து பெண்கள் 2009 இறுதியில் அங்கிருக்கும் மத குருமார்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது பின் வழக்கு தொடுக்கப்பட்டது. இவர் கடந்த 2009 இறுதியில் இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அதன்பின் 2010ல் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

உறுதியானது

உறுதியானது

அதைத்தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் 2010ல் இந்த தீர்ப்பை லாகூர் நீதிமன்றம் இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அதன்படி ஆசியா பிபிக்கு தூக்கு தண்டனை கொடுத்தது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. இது உலக நாடுகளுக்கு இடையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மாற்றினார்கள்

மாற்றினார்கள்

இந்த நிலையில் கடந்த 8 வருடமாக ஆசியா பிபி சிறையில் கஷ்டப்பட்டு வந்தார். ஆசியா பிபியின் கணவர் ஆசிக் மாஷா இதற்கு எதிராக வழக்கு தொடுத்து போராடி வந்தார். இதையடுத்து 2018ல் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று சென்ற வாரம் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் இதற்கு எதிராக தற்போது பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இவர் விடுதலை செய்யப்பட்டது தவறு என்று பாகிஸ்தானில் மக்கள் பலர் போராடி வருகிறார்கள். பல இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.

வெளிநாடு

வெளிநாடு

கடந்த நான்கு நாட்களாக இந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. முக்கியமாக அந்த பெண் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது அங்கு பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் அந்த பெண்ணின் உருவ பொம்மையை கூட எரித்து இருக்கிறார்கள்.

அனுமதி கிடையாது

அனுமதி கிடையாது

இந்த நிலையில்தான் அந்த பெண் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு இருக்கிறார். லண்டனில் வசிக்க இவர் அகதி கோரிக்கை வைத்துள்ளார். அதேசமயம் இவருக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் இஸ்லாமிய அமைப்புகள் முடிவெடுத்து இருக்கிறது.

English summary
Asia Bibi Case: A 8 years old statement made Pakisthan into new violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X