For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“இது இந்தியாவின் நேரம்”…. சியோலில் மோடி முழக்கம்

Google Oneindia Tamil News

சியோல்: தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற 6 வது ஆசிய தலைவர்களின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகள் முன்னேற வேண்டுமானால், அந்த நாடுகள் ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டால் தான் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சியோலில் நடந்த இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், தென்கொரியா அதிபர் பார்க் கியுன் ஹே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Asias’ unity will shape the world- PM Modi

அதில் மோடி பேசுகையில், ஆசிய நாடுகளின் ஒற்றுமை உலகத்தை உருவாக்கும் விதமாக உள்ளதாக குறிப்பிட்டார். ஒரு நாட்டின் வெற்றி, மற்றொரு நாட்டின் வலிமையில் தான் உள்ளது.

ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து ஐ.நா. சபை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச ஆளுமையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும. து புதிய சகாப்தத்தில் ஆசிய நாடுகளின் எழுச்சியாக அமையும்.

ஆசிய நாடுகளின் வெற்றிக்கு முன்னேற்றமே காரணம். இது ஆசிய நாடுகளின் கனவை உயர்ந்த அளவில் நனவாக்குகிறது.

ஆசிய நாடுகளுடன் இந்தியா பரஸ்பரம்,மற்றும் நட்பினை அதிகளவில் பகிர்ந்து கொண்டுள்ளது. ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போரிட வேண்டும். ஐ.நா. மற்றும் பாதுகாப்பு கவுன்சில் மாற்றத்தை கொண்டு வர ஒன்றாக பணியாற்ற வேண்டும்.

ஆசியாவில் உள்ள வளம் மிக்க நாடுகள் ங்கள் வளங்களை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக வேண்டும். இந்தியாவின் ஆற்றல் சந்தேகத்திற்கிடமானதாக ஒரு போதும் இல்லை. கடந்த காலத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உலக நாடுகள் வளர்ச்சியடைய இந்தியா தனது பங்களிப்பை நிச்சயம் வழங்கும் என்று மோடி தெரிவித்தார்.

English summary
PM Modi while speaking in the VI Asia Leadership Conference in South Korean capital Seoul said that, Asia’s unity will shape the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X