For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பறந்து வந்த குட்டி டிரோன்.. வெனிசூலா அதிபரை கொல்ல நடந்த சதி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்!

வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கொலை செய்ய நேற்று முயற்சி நடந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கராகஸ்: வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கொலை செய்ய நேற்று முயற்சி நடந்து இருக்கிறது. மிகச்சிறிய இடைவெளியில் அவர் உயர் தப்பி உள்ளார்.

வெனிசூலா தற்போது மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. அந்நாட்டின் பணவீக்கம் தற்போது 10 லட்சம் சதவிகிதத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில்தான் அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.

அவர் ஏற்பாடு செய்த ''பொம்மை அமைச்சரவையின்'' ஒருவருட விழாவில் இந்த நிகழ்வு நடந்து இருக்கிறது. இது குறித்த வீடியோவும் வெளியாகி உள்ளது.

வீடியோ வெளியானது

நிகோலஸ் மதுரோ பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவருக்கு எதிரில் ஆளில்லா சிறிய டிரோன் விமானம் ஒன்று பறந்து இருக்கிறது. சரியாக அந்த விமானம், அதிபரை கொலை செய்ய முயற்சிக்கும் போது சுட்டு வீழ்த்தப்பட்டது.

பிரச்சனை இல்லை

அவர் இதை குழப்பமாக பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். உடனே, அவரது பாதுகாவலர்கள் அவரை சுற்றி வளைத்துக் கொண்டனர். குண்டு புகாத, பாதுகாப்பு உபகரணம் கொண்டு அவரை மறைத்து இருக்கிறார்கள். இந்த அசாதாரண சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

குற்றச்சாட்டு வைத்தார்

தற்போது இந்த தாக்குதலுக்கு அவர், ஜான் மனுவேல் சாண்டோஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஜான் மனுவேல் சாண்டோஸ் கொலம்பியாவின் அதிபர் ஆவார். அவர்தான் தன்னை கொலை செய்ய இந்த திட்டத்தை நடத்தியதாக கூறியுள்ளார். ஆனால் கொலம்பியா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

என்ன காரணம்

அதேசமயம் வெனிசூலாவில் நிலவும் மோசமான பொருளாதார நிலையும் இதற்கு ஒரு காரணம் ஆகும். தற்போது அங்கு 100க்கும் அதிகமான சிறு சிறு ஆயுத குழுக்கள் உருவாகி இருக்கிறது. சில ஆயுத குழுக்கள் அரசுக்கு எதிராகவும், சில மக்களுக்கே எதிராகவும் செயல்பட்டு வருகிறது. இதில் எதாவது ஒரு குழு இப்படி செய்து இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Assassination Attempt to kill Venezuela President Maduro. At the last minute, he survived with help of security force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X