For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமிக்கும், நிலவுக்கும் இடையே ஒரு விண்கல் கிராஸ் பண்ணப் போகுது!

Google Oneindia Tamil News

Recommended Video

    பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருக்கும் விண்கல்- வீடியோ

    நாசா: 130 அடி அகலம் உடைய மிகப் பெரிய விண்கல் ஒன்று வெள்ளிக்கிழமையன்று பூமிக்கும், நிலவுக்கும் இடையே கடக்கவுள்ளது. பூமியிலிருந்து 39,000 மைல்கள் தொலைவில் இந்த கிராஸிங் நடைபெறவுள்ளது.

    நாசாவின் காட்டலீனா விண்வெளி ஆய்வு தொலைநோக்கி மூலமாக இந்த விண்கல் பிப்ரவரி 4ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் இரண்டு விண்கற்கள் பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான பாதையில் வலம் வருகின்றன.

    அதில் ஒரு விண்கல்லின் பெயர் 2018 சிசி, இன்னொன்று 2018 சிபி. இன்று கடக்கவுள்ள கல்லின் பெயர் 2018 சிபி. இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

    நெருங்கி வந்த 2018 சிசி

    நெருங்கி வந்த 2018 சிசி

    பிப்ரவரி 6ம் தேதி அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் ஏவப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 2018
    சிசி விண்கல்லானது பூமிக்கு மிக நெருக்கத்தில் வந்தது.

    பூமியிலிருந்து 1 லட்சம் கி.மீ தூரத்தில்

    பூமியிலிருந்து 1 லட்சம் கி.மீ தூரத்தில்

    அதாவது பூமியிலிருந்து 1 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் நெருங்கி வந்தது. இன்று பூமிக்கும், நிலவுக்கும் இடையே 2018 சிபி கடந்து செல்லும்போது அந்த விண்கல்லை விட நெருக்கமாக கடந்து செல்லவுள்ளது.

    அதிகாலை 4 மணிக்கு

    அதிகாலை 4 மணிக்கு

    இந்திய நேரப்படி இந்த விண்கல்லானது நாளை அதிகாலை 4 மணியளவில் பூமிக்கும், நிலவுக்கும் இடையே கடந்து செல்லும். பூமிக்கு 64,000 கிலோமீட்டர் தொலைவில் இது கடந்து செல்லும். இது நமக்கும், நிலவுக்கும் இடையிலான தூரத்தை விட 5 மடங்கு நெருக்கமானதாகும்.

    பெரிய சைஸ்தான்

    பெரிய சைஸ்தான்

    இந்த விண்கல்லானது அளவில் சிறிதாக இருந்தாலும் கூட கடந்த 2013ம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் வான் பகுதியில், நமது வளிமண்டலத்திற்குள் நுழைந்த விண்கல்லை விட பெரியது. அந்த விண்கல்லானது 65 அடி அகலம் கொண்டது. ரஷ்யாவின் தெற்கு ஊரல் பகுதியில் விழுந்து நொறுங்கிச் சாம்பலானது.

    நமக்கு ஆபத்தில்லை

    நமக்கு ஆபத்தில்லை

    வளிமண்டலத்திற்குள் நுழைந்த வேகத்தில் சிதறி விழுந்து எரிந்து போனது. இந்த விண்கல் வெடித்துச் சிதறியதன் காரணமாக அப்பகுதியில் 7200கட்டடங்கள் சேதமடைந்தன. 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது கடக்கவிருக்கும் விண்கல்லால் நமக்கு ஆபத்தில்லை என்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

    English summary
    An Asteroid named 2018 CB by NASA is all set to cross between Earth and Moon on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X