For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளியில் ஹாயாக சுற்றும் 'டெஸ்லா ரோட்ஸ்டர் கார்'... டெலஸ்கோப்பில் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ள எலன் மஸ்க்கின் செந்நிற டெஸ்லா காரின் பாதையை வெர்ச்சுவல் டெலஸ்கோப் ப்ராஜெக்ட்டை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    விண்வெளியில் ஹாயாக சுற்றும் டெஸ்லா ரோட்ஸ்டர் கார்-வீடியோ

    வாஷிங்டன் : எலன் மஸ்க்கின் சாதனையான டெஸ்லா ரோட்ஸ்டர் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக டெலஸ்கோப்பில் கண்டறிப்பட்டுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்.

    கடந்த வாரத்தில் இவர் செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய செந்நிற டெஸ்லா ரோட்ஸ்டர் கார் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. சூரிய குடும்பத்தைக் கடந்து இந்த கார் செவ்வாய் கிரகத்தை அடைய 6 மாத காலமாகும். ஆனால் இது திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை அடையுமா என்பதும் கேள்விக்குறியே.

    டெலஸ்கோப்பில் கண்டுபிடிப்பு

    டெலஸ்கோப்பில் கண்டுபிடிப்பு

    இந்நிலையில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஆஸ்ட்ராய்ட் பெல்ட்டில் நட்சத்திரங்களின் இடையே வேகமான ஒரு பொருள் நகர்வது டெலஸ்கோப்பில் கண்டறிப்பட்டுள்ளது. வெர்ச்சுவர் டெலஸ்கோப் ப்ராஜெக்ட் ரோட்ஸ்டர் விண்வெளியில் சுற்றி வரும் புகைப்படம், வீடியோவை வெளியிட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர் மாஸி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    நட்சத்திரங்களிடையே காணப்பட்ட ரோட்ஸ்டர்

    நட்சத்திரங்களிடையே காணப்பட்ட ரோட்ஸ்டர்

    ரோட்ஸ்டரை டெலிஸ்கோப்பில் எளிதில் கண்டறிய முடிந்ததாக மாஸி கூறியுள்ளார். வானில் உள்ள மற்றவை போல ரோட்ஸ்டர் தெளிவானதாக இல்லை ஆனால் மற்ற நட்சத்திரங்களை விட்டு விலகி வேகமாக நகர்ந்து செல்வது இதனை எளிதில் காண முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

    புகைப்படம் வெளியீடு

    புகைப்படம் வெளியீடு

    ரோட்ஸ்டரை புகைப்படம் எடுக்கும்போது பூமியில் இருந்து 470,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ரோட்ஸ்டர் 9,000 mph என்ற வேகத்திலோ அல்லது மணிக்கு 14 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற வேகத்திலோ பயணிப்பதாக கூறப்படுகிறது.

    டெலஸ்கோப் வழியே

    டெலஸ்கோப் வழியே

    இந்த வேகத்தில் செல்லும் போது வெறும் கண்களால் ரோட்ஸ்டரை கண்டறிவது கடினம். எனவே 16"/400மிமி டெலஸ்கோப் மூலம் இதனை காணலாம் என்றும் மாஸி கூறியுள்ளார்.

    English summary
    Astronomers at an observatory on the ground have given us a different view of Starman and his Tesla Roadster – a tiny dot speeding along amongst the stars on its journey towards the asteroid belt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X