ஹவாயில் வெடித்த எரிமலை கடலில் கலந்தது.. பசுபிக் பெருங்கடலுக்கு உருவாகி இருக்கும் பேராபத்து!

ஹவாய்: ஹவாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து தற்போது பசிபிக் பெருங்கடலில் கலந்துள்ளது. கடலில் மிகவும் அதிக அளவில் லாவா குழம்புகள் கலந்துள்ளது.
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்த இரண்டு வாரமாக வெடித்து நெருப்பை கக்கிக்கொண்டுள்ளது. நேற்று மூன்றாவது முறையாக வெடித்துள்ளது. இது மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். இதற்காக அமெரிக்க அரசு மீட்பு படையை அனுப்பி இருந்தது.
கடந்த இரண்டு வருடமாக மாறி மாறி வெடித்துக் கொண்டு இருந்த எரிமலை தற்போது மீண்டும் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது.இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் மீட்கப்பட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இரண்டு வாரமாக வெடித்துக் கொண்டுள்ளது
1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. முக்கியமாக கிலாயூ என்ற எரிமலைதான் அதிக வீரியத்துடன் காணப்பட்டது. தற்போது இந்த எரிமலைதான் வெடித்துள்ளது. அந்த வகையில் கிலாயூ எரிமலை இரண்டு வாரம் முன்பு வெடித்தது. இதனால் 100 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. 2500 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பலர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மீட்புபணி செய்ய முடியாததால், இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிட முடியவில்லை.

பசுபிக்
பசுபிக் கடலில் ஓரம் இருக்கும் இந்த எரிமலை வெடித்ததால், முதலில் இது பசுபிக் கடலில் கலக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை பல முறை இந்த எரிமலை வெடித்து இருந்தாலும் ஒரு முறை கூட கடலில் எரிமலை குழம்புகள் கலந்ததே இல்லை. ஆனால் முதல்முறையாக தற்போது எரிமலை கடலுக்குள்ளும் கலந்துள்ளது. பெரிய அளவில், கடலில் நடுப்பகுதி வரை இந்த எரிமலை கலந்து உள்ளது. இதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

எல்லாம் வந்தது
இதனால் வெறும் நெருப்புக் குளம்புகள் மட்டுமில்லாமல், வெடித்து சிதறிய பாறை துண்டுகளும் கடலில் கலந்துள்ளது. எரிந்த கார், பைக், இரும்பு பொருட்கள், வீடுகள், சில மனித உடல்கள் என எல்லாம் கடலில் அப்படியே சென்று கலந்துள்ளது. இது கடல் பகுதியை மொத்தமாக மாசுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தீயணைப்பு படைவீரர்கள் குழம்பி வருகிறார்கள்.

நோய்
இது இன்னொரு விதமான பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த நெருப்புக் குழம்புகள் நீரில் கலந்த உடன், பெரிய அளவில் நீர் ஆவியாகி உள்ளதால், அருகருகே நீராவி படலம் உருவாகி உள்ளது. இந்த நீராவி படலத்தில் மோசமான வாயுக்கள் இருப்பதாகவும், இதை சுவாசித்தால் பெரிய அளவில் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.