For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 நாட்களாக செவ்வாயில் வீசும் புயல்.. சிக்கி தவிக்கும் ரோவர்.. கடைசியாக அனுப்பிய போட்டோ!

செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ரோவர், தற்போது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    100 நாட்களாக செவ்வாயில் வீசும் புயல்.. சிக்கி தவிக்கும் ரோவர்-வீடியோ

    நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ரோவர், தற்போது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    க்யூரியாசிட்டி (curiosity) இந்த ஆங்கில வார்த்தைக்கு தமிழில் ஆர்வம் என்று பொருள். செவ்வாய் கிரகத்தை ஆராயும் ''ஆர்வத்தில்'' அனுப்பப்பட்டதுதான், க்யூரியாசிட்டி ரோவர். செவ்வாயில் முதலில் தடம் பதித்த ரோவரும் இதுதான்.

    2011ல் அனுப்பப்பட்ட இந்த ரோவர் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 7 வருடமாக மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எந்த ஏலியனின் கண்பட்டதோ தெரியவில்லை கடந்த நூறு நாட்களுக்கு முன் இந்த ரோவர் காணாமல் போனது.

    என்ன ரோவர்

    என்ன ரோவர்

    செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ரோவர், தற்போது மோசமான செவ்வாய் கிரக புயல் காரணமாக மொத்தமாக செயலிழந்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நாசா க்யூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ வாகனத்தை அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். செவ்வாயில் இதுவரை இது 19 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளது (சென்ற மே கணக்குப்படி).

    நிலையாக அனுப்புகிறது

    நிலையாக அனுப்புகிறது

    இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த ரோவர் இவ்வளவு நாட்களாக எல்லா செவ்வாய் கிரக புயலிலும் தாக்குப்பிடித்தது. இது அனுப்பும் புகைப்படங்கள் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புயல் காரணமாக இதுவரை ஒருமுறை கூட ரோவர் செயலிழந்தது கிடையாது.

    காணவில்லை

    காணவில்லை

    செவ்வாய் கிரகம் அடிக்கடி புயல் அடிக்க கூடிய கிரகம் என்பதால் அதற்கு ஏற்றார் போலத்தான் வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு செவ்வாய் கிரகத்தில் பெரிய புயல் வீசியுள்ளது. செவ்வாய் கிரக வரலாற்றில் வீசாத புயல் இது என்று கூறப்படுகிறது. செவ்வாயின் முக்கால் பகுதியை இந்த புயல் மொத்தமாக ஆக்கிரமித்தது. இதனால் அந்த ரோவர் காணாமல் போனது.

    என்ன

    என்ன

    இந்த புயல் காரணமாக ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் கொஞ்சம் கொஞ்சமாக ரோவரை நெருங்கி வரும் போது, அதை ரோவர் படம் பிடித்துள்ளது. ஆனால் கடைசி புகைப்படத்திற்கு பின் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரோவர் இயங்காமல் இருந்துள்ளது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    ரோவர் சூரிய ஒளியை வைத்து இயங்க கூடியது. புயல் காரணமாக இந்த ரோவருக்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு செவ்வாயை புயல் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே ரோவருக்கு சூரிய ஒளி கிடைக்காமல், அது அணைந்து போய் இருக்கிறது. கடந்த 100 நாட்களாக ரோவருடன் நாசா ஒட்டுமில்லாமல் உறவும் இல்லாமல் பிரிந்த காதலர்கள் போல பேசமுடியாமல் இருந்துள்ளது.

    நாசா கண்டுபிடித்து

    நாசா கண்டுபிடித்து

    இந்த நிலையில் நாசா இந்த ரோவரை தற்போது கண்டுபிடித்து இருக்கிறது. செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் மார்ஸ் ரிகோனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) என்று செயற்கைகோள் இந்த ரோவரை படம் பிடித்து இருக்கிறது. செவ்வாயில் தெரிய கூடிய சிறிய புள்ளிதான் இந்த ரோவர் என்று படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் செவ்வாயில் சூரிய ஒளி மீண்டும் பழைய நிலைமைக்கு வந்த பின் ரோவர் எப்போதும் போல செயல்பட வாய்ப்பு இருக்கிறது.

    English summary
    At last NASA finds the rover Opportunity amidst Mars Storm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X