For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயங்கர கொந்தளிப்பு.. நடுக்கடலில் கப்பல் இரண்டாக நொறுங்கி மூழ்கியது.. 27 பேர் மாயம்.. ஹாங்காங் சோகம்

கடலில் கப்பல் மூழ்கியதில் 27 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஹாங்காங் அருகே கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கியதில், 27 பேர் மாயமாகி உள்ளனர். தென்சீன கடல் பகுதியில், மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கப்பல் இரண்டாக உடைந்து நொறுங்கி விழுந்தது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியாக ஹாங்காங் உள்ளது.. இதனிடையே, ஹாங்காங்கில் தென்சீன கடல் பகுதியில் கப்பல் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது.

Recommended Video

    China-வில் புயலால் இரண்டாக பிளந்த கப்பல் | China Typhoon 2022 *World

    அந்த கப்பலில் 30 பேர் பயணித்தனர்... ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்திற்கு உள்பட கடல் பகுதியில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பயங்கரமான புயல் தாக்கியது.

    நபிகள் நாயகம் மீது அவதூறு - வாய்திறந்த சீனா! எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என அறிவுரை நபிகள் நாயகம் மீது அவதூறு - வாய்திறந்த சீனா! எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என அறிவுரை

     சாபா புயல்

    சாபா புயல்

    இந்த புயல் தாக்கியதில் கப்பல் இரண்டாக நொறுங்கியது.. இதனால், கப்பலில் பயணித்த 30 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் மட்டும உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், கப்பலில் பயணித்த எஞ்சிய 27 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை..

     எங்கே அவர்கள்

    எங்கே அவர்கள்

    அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், காணாமல் போன 27 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம், தென் சீனக் கடல் பகுதியில், சாபா புயல் காற்று வீசியதால், கப்பலே மூழ்கும் நிலைமை ஆகிவிட்டது.. ஹாங்காங் நகரத்தின் தென் மேற்கு பகுதியில் 300 கிமீ தொலைவில் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

     அதிகாரிகள்

    அதிகாரிகள்

    மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால், அந்த கப்பல் எந்த நாட்டை சேந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர்.. மாயமானவர்கள் நடுக்கடலில் மூழ்கி உள்ளதால், அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ஹாங்க் அரசின் விமான மீட்பு குழு தெரிவித்துள்ளது.

    கப்பல்

    கப்பல்

    விபத்து நடந்ததுமே, மூழ்கியவர்களை மீட்க விமானங்கள் விரைந்துள்ளன.. ஆனால், அதற்குள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்கிறார்கள்.. விபத்து நடந்த இடத்தில் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், 10 மீட்டர் உயர அலைகள் வீசியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. தொடர்ந்து மோசமான வானிலையே நிலவுவதாக சொல்கிறார்கள்.. அந்த கப்பலில் இருந்தவர்கள் அனைவருமே பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    at least 27 missing in shipwreck during south china sea chaba typhoon கடலில் கப்பல் மூழ்கியதில் 27 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X