For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 28 நீர் யானைகள் உயிரிழப்பு... வனஉயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

ஆடிஸ் அபபா: எத்தியோப்பியா தேசிய உயிரியல் பூங்காவில் ஒரு வாரத்தில் 28 நீர் யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது வனஉயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெல்கிட்டே நகரில் இருந்து 178 கிலோமீட்டர் தூரத்தில் ஜிபே ஆற்றங்கரையில் 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைத்துள்ள வன உயரின பூங்காதான் ஜிபே ஜிலேகோ தேசிய பூங்கா.

 at least 28 hippopotamuses have been found in Ethiopias Gibe Sheleko National Park

இங்கு கடந்த 2011ம் ஆண்டு நிலவரப்படி 200 நீர் யானைகள் இருந்தன. உலக அளவில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் முதல் 1 லட்சத்து 30 ஆயிம் நீர்யானைகள் தான் இருக்கின்றன.

இந்நிலையில் வேட்டையாடுதல், வனங்கள் அழிப்பு, காற்று மாசுபாடு, உள்ளிட்டவற்றின் காரணமாக நீர் யானைகள் எண்ணிக்கை வேகமாக குறைந்த வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஆன்ந்த்ராக்ஸ் நோய் காரணமாக 200 நீர்யானைகள் உயிரிழந்தன.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை 28 நீர் யானைகள் உயிரிழந்துள்ளன. இவை என்ன காரணத்துக்காக உயிரிழந்தன என்பது இதுவரை தெரியவரவில்லை. இதனால் வன உயரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

English summary
at least 28 hippopotamuses have been found dead in Ethiopia's Gibe Sheleko National Park in one week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X