For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரிஸ் தபால் நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து பணயக் கைதிகளை பிடித்த நபர்

By Chakra
Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.

பாரிஸுக்கு வட மேற்கே கொலம்பெஸ் என்ற பகுதியில் இன்று போஸ்ட் ஆபிசுக்குள் நுழைந்த நபர் அங்கு 3 பேரை சிறை பிடித்துள்ளான்.

கைகளில் ஏ.கே 47 துப்பாக்கிகள், கிரனைட் குண்டுகள் சகிதம் தபால் நிலையத்துக்குள் நுழைந்துள்ள நபர், 3க்கும் அதிகமானோரை சிறை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நேரப்படி பகல் 12 மணிக்கு உள்ளே நுழைந்து பணயக் கைதிகளை பிடித்து வைத்துள்ள அந்த நபருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அவன் தீவிரவாதியா அல்லது கிரிமினலா என்பது உறுதியாகவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பாரிஸின் சார்லி ஹெப்டோ அலுவலகத்துக்குள் நுழைந்து ஏமன் அல்-கொய்தா அமைப்பு நடத்திய தாக்குதலில் 9 பத்திரிக்கையாளர்களும், கார்ட்டூனிஸ்டுகளும், பணயக் கைதிகளை பிடித்து வைத்து அதே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் 3 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

English summary
At least three people have been taken hostage by an unknown gunman at a post office in Colombes, a northwest suburb of Paris, French media reported. The gunman is armed with a Kalashnikov rifle, a gun and numerous grenades, French RTL radio reports. He may be holding up to five people hostage, say police sources. The hostages were seized at about 12:00 GMT when a man rushed into the post office with a weapon. Negotiations with the assailant have started.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X