For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துருக்கி அருகே கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 5 சிறுவர்கள் உள்பட 33 பேர் நீரில் கவிழ்ந்து பலி!

By Karthikeyan
Google Oneindia Tamil News

அங்காரா: துருக்கி அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 5 குழந்தைகள் உள்பட 33 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

துருக்கியில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றி கிரீஸூக்குச் சென்று கொண்டிருந்த படகு துருக்கியையொட்டிய ஐவாசிக் என்ற கடல் பகுதிக்கு அருகே கவிழ்ந்தது.

At least 33 people drowned off the western coast of Turkey

இது குறித்து துருக்கி அரசு செய்தி நிறுவனம், இதில் 5 சிறுவர்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். தண்ணீரில் தத்தளித்த மேலும் 75 பேரை துருக்கி கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

படகில் பயணம் செய்த அகதிகள் சிரியா, ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து நடுக்கடலில் படகு கவிழ்ந்து பலியானவர்கள் எண்ணிக்கை 218 ஆகும். துருக்கியிலிருந்து கடல் வழியாக கிரீஸ் செல்லும் வழியில் ஏற்படும் விபத்துகளில் இவர்கள் உயிரிழந்தனர்.

துருக்கியில் தற்போது சிரியாவைச் சேர்ந்த 25 லட்சம் அகதிகள் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் போதை பொருள் கடத்தல் தொடர்புக்கு எதிராகவும், ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகள் பலம்பெயர்வதை தடுத்திடவும் நடவடிக்கை எடுத்திட துருக்கி ஒப்புதல் அளித்தது. இதற்கு பதிலாக அகதிகளின் நிலைமையை முன்னேற்ற உதவுவதற்கு 300 கோடி ஐரோப்பிய யூரோ பணத்தை அளிப்பதற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
At least 33 people, including 5 children, were drowned off the western coast of Turkey Saturday,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X