For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலிபோர்னியா வாக்குச்சாவடி அருகே துப்பாக்கி சூடு.. ஒருவர் சாவு! அதிபர் தேர்தலை சீர் குலைக்க சதி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அந்த மாகாண நேரப்படி மதியம் 2 மணியளவில் தாக்குதல் நடைபெற்றது. அப்போது இந்திய நேரம் அதிகாலை 5 மணியளவாகும்.

At least 4 people taken to hospital after shooting in Azusa, California

துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, பள்ளிகள், வணிக நிறுவனங்களை உடனடியாக மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரை பிடிக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தோர், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி, அதில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

English summary
At least 4 people taken to hospital after shooting in Azusa, California; shooter at large; polling stations on lockdown .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X