For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவிலும் வரணும்.. அன்லிமிடெட் டேட்டா ப்ளானில் நெட் ஸ்பீடு குறைப்புக்கு $100 மில்லியன் ஃபைன்!!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செல்போன்களில் அன்லிமிடெட் டேட்டா ப்ளான் கொடுத்துவிட்டு திடீரென நெட் ஸ்பீடு குறைப்பது என்பது இந்திய மொபைல் நிறுவனங்களின் வழக்கம்தான்.. ஆனால் அமெரிக்காவில் இப்படி செய்த ஏடி அண்ட் ஏடி நிறுவனத்துக்கு 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது 'நம்மூரிலும் இப்படி நடக்காதா' என இந்திய 'நெட்' பயனாளர்களை ஏங்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் 2வது செல்போன் சேவை நிறுவனம் ஏடி அண்ட் ஏடி. இந்நிறுவனமும் மற்ற நிறுவனங்களைப் போல "அன்லிமிடெட் ப்ளான்.. இதில் 4 ஜிபி வரை 5- 12 எம்.பி.பி.எஸ் ஸ்பீடு கிடைக்கும்.. அதன் பின்னர் 700 கேபிபிஎஸ், 512 கேபிபிஎஸ்க்கு குறைந்துவிடும் என்று நடைமுறைப்படுத்தி வருகிறது.

AT&T just got hit with a $100 million fine after slowing down its ‘unlimited’ data

ஆனால் பொதுவாக செல்போன் நிறுவனங்கள் இத்தனை ஜிபி வரைக்கும்தான் இந்த ஸ்பீடு கிடைக்கும்; அதன் பிறகு குறைந்துவிடும் என்றெல்லாம் சொல்வதில்லை.. அன்லிமிடெட் ஸ்பீடு என்ற கவர்ச்சி அறிவிப்பின் கீழ் இந்த டுபாக்கூர் வேலையைத்தான் செய்து வருகின்றன. இதையேதான் ஏடி அண்ட் ஏடி நிறுவன

இதை அறியாமல் இந்த அன்லிமிடெட் டேட்டா ப்ளானை பயன்படுத்தி வந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், என்னடா திடீர்னு ஸ்லோடு ஸ்பீடு ஆகிறதே என பெரும் அவதிக்குள்ளாகிய கையோடு அமெரிக்காவின் தகவல் தொடர்பு ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஏடி அண்ட் ஏடி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி 100 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

ஆனால் இந்த அபராதத் தொகை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து தரப்படாமல் அமெரிக்காவின் கருவூலத்துக்குத்தான் போகுமாம்.. இந்த அபராதத் தொகை அதிகம்.. இதை எதிர்த்து சட்டப்படி முறையிடுவோம் என்று குதித்துக் கொண்டிருக்கிறது ஏடி அண்ட் ஏடி மொபைல் நிறுவனம்.

ஏற்கெனவே இந்நிறுவனம் மாதத்துக்கு 12 நாள் ஸ்லோடு ஸ்பீடுதான் கொடுக்கிறது என்ற புகாருக்கும் உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நம்ம இந்தியாவிலும் இது கண்டிப்பாக வந்தாதான் நிம்மதியாக இருக்கும்ல!

English summary
The US Federal Communications Commission slapped AT&T with a $100 million fine Wednesday, accusing the country's second-largest cellular carrier of improperly slowing down Internet speeds for customers who had signed up for "unlimited" data plans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X