For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்க்கண்டேய கட்ஜூக்கு "தமிழ் தோழன்" பட்டம் வழங்கி சிறப்பித்த அட்லாண்டா தமிழர்கள் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

அட்லாண்டா: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூக்கு தமிழ் தோழன் என்ற பட்டம் வழங்கி அட்லாண்டா தமிழர்கள் சிறப்பித்துள்ளார்கள்.

தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுப்பவர் மார்க்கண்டேய கட்ஜு. இவர் எப்போதும் தமிழக அரசியல் குறித்தும், தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை குறித்தும் பல்வேறு கருத்துக்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவார்.

Atlanta Tamil makkal honored to Markandey Katju

தற்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்துள்ள மாணவர்களுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இவர் ஏற்கனவே தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல தடவை குரல் எழுப்பியுள்ளார். அப்போதும் அங்கு போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக தனது குரலினை உயர்த்தினார்.

Atlanta Tamil makkal honored to Markandey Katju

இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மார்க்கண்டேய கட்ஜூ, ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டாவில் #SaveTamilNaduFarmer மற்றும் அட்லாண்டா தமிழ் மக்கள் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து விரிவாக பேசிய கட்ஜூ, நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டது குறித்து மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது: அட்லாண்டா தமிழ் மகளிர் எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு செய்தனர். அட்லாண்டா தமிழ் மக்கள் எனக்கு " தமிழ் தோழன் " என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள். தமிழ்நாட்டில் சமூக நோக்கத்திற்காக போராடும் வக்கீல்களை ஒன்றிணைப்பதர்க்காக "தமிழகத்தின் வழக்கறிஞர்கள் குழுவை " ஆரம்பித்து வைத்தேன். #மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்

English summary
Atlanta Tamil makkal honored to Markandey Katju with the title of Tamil thozan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X