For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானசரோவரில் மோசமான வானிலை... 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் தவிப்பு

மானசரோவரில் மோசமான வானிலை நிலவுவதால் 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் தவிப்பு- வீடியோ

    காத்மாண்டு: மானசரோவரில் மோசமான வானிலை நிலவுவதால் 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளில் சிக்கி தவித்து வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    கைலாஷ் மானசரோவருக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

    அங்கு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் 23 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் நேபாளத்தில் உள்ள அம்லா மாவட்டத்தில் சிக்கியுள்ளனர்.

    தூதரகத்தை தொடர்பு கொண்ட இந்தியர்கள்

    தூதரகத்தை தொடர்பு கொண்ட இந்தியர்கள்

    இந்த 200 பேரில் 150 பேர் நேபாள- திபெத் எல்லையில் சிமிகோட்டிலும் 50 பேர் ஹில்சாவிலும் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு நிலையை விளக்கியுள்ளனர்.

    விமானம் மூலம்

    விமானம் மூலம்

    இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வானிலை மோசமாக உள்ளதால் ஹில்சா மற்றும் சிமிகோட்டில் உள்ள யாத்ரீகர்களை லக்னோவில் இருந்து 4 மணி நேர பயண தூரத்தில் உள்ள நேபாள்கஞ்சுக்கு விமானத்தில் கொண்டு செல்வது சிரமம்.

    மருத்துவ வசதி

    மருத்துவ வசதி

    எனவே வானிலை சரியான பிறகு அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அது வரை அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    பத்திரமாக மீட்பு

    கடந்த மாதமும் இதேபோல் மோசமான வானிலை காரணமாக 1500 யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கி தவித்தனர். இதில் தமிழக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ காயத்ரிதேவியும் சிக்கியிருந்தார். பின்னர் இந்திய தூதரகத்தின் முயற்சியின்பேரில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    There were around 150 pilgrims stranded in Simikot and 50 in Hilsa, near Nepal-Tibet border due to bad weather in Mansarovar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X