For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரி சுருட்டி சென்ற சுனாமி.. புரட்டி போட்ட நிலநடுக்கம்.. இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 384 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... 6 அடிக்கு உயர்ந்த கடல் அலை சுனாமி..வீடியோ

    சுலேவேசி: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலி எண்ணிக்கை 384-ஆக உயர்ந்துள்ளது.

    இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் டோங்கலா என்ற பகுதியை மையமாக கொண்டு நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இதை தொடர்ந்து அந்நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கையும் விடுத்தது.

    தஞ்சம்

    தஞ்சம்

    எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின. திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் மசூதி ஒன்று பலத்த சேதமடைந்தது. மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனர்.

    384 பேர் பலி

    384 பேர் பலி

    சுமார் 6.6 அடி உயரத்துக்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் இதுவரை 384 பேர் பலியாகிவுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் வசிப்பு

    மக்கள் வசிப்பு

    இந்த இயற்கை பேரழிவால் மக்கள் வீடுகளை இழந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஏராளமானோர் வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. டோங்கலா மற்றும் பலு பகுதியில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிந்து வருகின்றனர்.

    அடித்து செல்லப்பட்ட மக்கள்

    அடித்து செல்லப்பட்ட மக்கள்

    இதுகுறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில் அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் விரிவான தகவல்கள் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. சுனாமி சுருட்டிக் கொண்டு சென்ற பெரும்பாலான உடல்கள் கரை ஓதுங்கின. இன்னும் எத்தனை பேர் சுனாமி அலையில் அடித்து செல்லப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    At least 30 people have reportedly been killed after a strong 7.5 magnitude earthquake and tsunami struck Indonesia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X