For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு!

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    USA Vs Iran: எண்ணெய் கப்பல்களை அழித்த ஈரான்?.. பகீர் குற்றச்சாட்டு!- வீடியோ

    ரியாத்: சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை ஈரான் தாக்கி அழித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

    ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இந்த ஒரே வழி மூலம் தான் உலக அளவில் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 40 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது.

    கணக்குப்படி பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்களில் 90% சதவிகிதம் இது வழியாகவே வருகிறது. இந்த சிறிய கடல் பாதைதான் தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.

    இது ஒன்னு போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல.. வைரலாகும் வீடியோ!இது ஒன்னு போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல.. வைரலாகும் வீடியோ!

    ஹோர்முஸ் ஜலசந்தி ஏன்?

    ஹோர்முஸ் ஜலசந்தி ஏன்?

    ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான்- ஓமன் நாடுகள் பிரித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனாலும் இதில் எப்போதும் ஈரானின் கையே ஓங்கி இருக்கும். ஹோர்முஸ் ஜலசந்தியை பல முறை பல நாடுகள் (அமெரிக்கா உட்பட) கைப்பற்ற நினைத்தது. ஆனால் பல்வேறு ஒப்பந்தங்கள், ஆதிக்கங்கள் மூலம் இதை ஈரான் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இந்த நிலையில்தான் ஈரான் அமெரிக்கா இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது முழு நடைமுறைக்கு வந்துள்ளது. அதோடு ஈரான் மீது முழுக்க முழுக்க 100% பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

    கடும் கோபம்

    கடும் கோபம்

    கடந்த வாரம்தான் ஈரான் மீது அமெரிக்கா மூன்றாவது பொருளாதார தடையை விதித்தது. இதுதான் தற்போது ஈரானை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் ஈரான் தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    எப்படி செய்யும்

    எப்படி செய்யும்

    அதாவது இந்த ஹோர்முஸ் ஜலசந்தி இருக்கும் பகுதியில் ஈரான் தனது ராணுவத்தை களமிறக்க முடிவெடுத்துள்ளது. அங்கு வரும் மற்ற நாட்டு கப்பல்களை தாக்க ஈரான் முடிவெடுத்து இருக்கிறது. அமெரிக்கா தங்களை மீண்டும், சீண்டினால் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி விடுவோம். நாங்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய கூடாது என்றால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது, என்று ஈரான் குறிப்பிட்டு இருந்தது.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் தற்போது ஹோர்முஸ் ஜலசந்தி இருக்கும் பெர்ஷியன் கடலில் 4 எண்ணெய் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது. இரண்டு சவுதியின் எண்ணெய் கப்பல்கள், ஒரு அமீரகத்தின் எண்ணெய் கப்பல், ஒரு தனியார் நிறுவன கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

    விளக்கம் இல்லை

    விளக்கம் இல்லை

    ஆனால் இது என்ன மாதிரியான தாக்குதல் என்று மூன்று பேரும் விளக்கவில்லை. இதில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. ஈரான்தான் இதை செய்தது என்று அமெரிக்கா வெளிப்படையாக் கூறி உள்ளது. ஆனால் இந்த தாக்குதல் குறித்த புகைப்படங்கள், சேத நிலவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் எண்ணெய் வள நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வருகிறது.

    யாரை பயன்படுத்துகிறது

    யாரை பயன்படுத்துகிறது

    சில அதி தீவிர அமைப்புகளை வைத்து, ஈரான் இது போன்ற தாக்குதல் நடத்துவதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இனி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எல்லா கப்பல்களும் இப்படித்தான் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது உலக அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது .

    English summary
    Attacks on 4 Oil Vessels including Saudi and UAE vessels: Iran may be the mastermind.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X