For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎஸ் தலைவர் பேரை கேட்ட ரிப்போட்டர்.. திருதிருவென முழித்த ஆஸி. பாதுகாப்பு அமைச்சர்!

Google Oneindia Tamil News

சிட்னி : தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பெயரை சொல்லத் தெரியாமல் சமாளித்த ஆஸ்திரேலிய நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரை அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பவர் கெவின் ஆண்ட்ரூஸ். நேற்று இவர் அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பெயர் குறித்து கேள்வி எழுப்பினார்.

Australia defence minister unable to name IS chief

அந்த கேள்விக்கு ஆண்ட்ரூஸ் நேரடியாக பதில் கூறவில்லை. சமாளிக்கும் விதமாக பதிலளித்தார். ஆனால் செய்தியாளர் விடுவதாக இல்லை, மீண்டும் மீண்டும் அதே கேள்வியையே அவர் எழுப்பினார்.

ஆனால், ஐஎஸ் ஐஎஸ் இயக்கத் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியின் பெயரை மறந்து போன ஆண்ட்ரூஸ் தொடர்ந்து நேரடியாக பதில் கூறாமல் சமாளித்தார். இந்த பேட்டி ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண்ட்ரூஸ் கூறுகையில், ‘எந்த தனிப்பட்ட நபர்களைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த அமைப்புகள் குறித்தே நான் யோசிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

ஈராக்கிற்கு உதவுவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து 330 வீரர்கள் புறப்பட்டுச் சென்றதை, ஆஸ்திரேலிய பிரதமருடன் சேர்ந்து அறிவித்த சில மணி நேரங்களில் இவ்வாறு பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆண்ட்ரூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Australia's defence minister has been left red-faced after apparently being unable to name the head of Islamic State on the day he committed more troops to help defeat the jihadist group
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X