For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுப்பு இல்லை..நெருப்பு இல்லை.. காருக்குள்ளேயே பன்றி கறி சமைத்து அசத்திய இளைஞர்

Google Oneindia Tamil News

பெர்த்: ஆஸ்திரேலியாவில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரில் எந்த அடுப்பும் இல்லாமல் சும்மாவே தனது காரின் இருக்கையில் 1.5 கிலோ பன்றி இறைச்சியை 10 மணி நேரம் வைத்து சமைத்துள்ளார். அதன் முடிவு அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது.100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டு பெங்கெல்லி, ஒரு வெப்பமான நாளில் தனது காரில் பன்றி இறைச்சியை வெற்றிகரமாக சமைத்து, தனது 'வேடிக்கைக்கான பரிசோதனை' என்ற பெயரில் தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பயங்கர வைரலாகி வருகிறது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியைச் சேர்ந்த அவர், தனது சிவப்பு டாட்சன் சன்னி கார் இருக்கையில் பெங்கெல்லி என்ற பன்றியின் இறைச்சியை ஒரு பேக்கிங் டின்னில் சுமார் 10 மணி நேரம் வைத்திருந்தார்.

கிளாஸ் ரூமிலேயே.. கைகளை பிளேடால் கிழித்து.. தூக்கில் தொங்கிய பேராசிரியை.. சென்னையில் பரபரப்பு! கிளாஸ் ரூமிலேயே.. கைகளை பிளேடால் கிழித்து.. தூக்கில் தொங்கிய பேராசிரியை.. சென்னையில் பரபரப்பு!

விருந்து

விருந்து

"இது தனது விருந்தாக அமைந்துள்ளது!" என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமைத்த இறைச்சியையும் அதன் துண்டுகளை நிரூபிக்க துண்டுகளாக வெட்டப்பட்ட படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

39 டிகிரி வெப்பம்

39 டிகிரி வெப்பம்

அந்த பதிவில் அவர் கூறிருந்ததாவது: நேற்றைய எனது வேடிக்கையான என் பரிசோதனையைத் தவறவிட்டவர்களுக்காக இந்த பதிவு , ஒரு பழைய டாட்சன் சன்னிக்குள் 1,5 கிலோ பன்றி இறைச்சியை 39 டிகிரி வெப்பம் கொளுத்திய நாளில் 10 மணிநேரத்தில் நான் சமைக்க முற்பட்டேன். இது ஒரு விருந்தாக எனக்கு அமைந்தது.

மேற்கூறையில் துவாரம்

மேற்கூறையில் துவாரம்

எனது காரின் இருக்கையில் பேக்கிங் டின்னில் அடைக்கப்பட்ட பன்றி கறியை வைத்தேன். அதன்பிறகு காரின் ஜன்னல் மற்றும் கதவு என நான் அனைத்தையும் மூடினேன். சூரிய ஒளி உள்ளபோகும் படி காரின் மேற்கூரையில் சிறிய துவாரம் ஏற்படுத்தினேன். அப்படியே வீட்டில் இருந்தபடியே மணிநேர வெப்பநிலையை கண்காணித்து வந்தேன்.

177 டிகிரி பாரன்ஹீட்

177 டிகிரி பாரன்ஹீட்

காலை 7 மணிக்கு 30 டிகிரியாக இருந்த வெப்பம், காலை 10 மணி 52 டிகிரியாக அதிகரித்தது. மதியம் 1 மணி வரை வெப்பநிலை உள்ளே 81 டிகிரியாக (177 டிகிரி பாரன்ஹீட்டாக) அதிகரித்தது. இது பழைய வாகனம் என்பதுடன் கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தால், வெப்பநிலை கணிசமாக உயர்ந்தது. கடைசியில் எனக்கு அது விருந்தாக அமைந்தது.

குழந்தையை விடாதீர்

குழந்தையை விடாதீர்

என் எச்சரிக்கை என்னவென்றால், யாரையும் அல்லது உங்களுக்கு விலைமதிப்பற்ற எதையும் மூடப்பட்ட சூடான காரில் விடாதீர்கள், ஒரு நிமிடம் கூட விடாதீர்கள்.. குழந்தைகள் அல்லது நாய்களை ஒரு சூடான காரில் பார்த்தால், விரைவில் வெளியேற்ற அதன் கண்ணாடியை இறக்குவதற்கு தயங்க வேண்டாம். இதைச் செய்வது குற்றமல்ல, நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மாட்டுக்கறி

அவரது பதிவினை பார்த்து வியந்த ஆஸ்திரேலிய மக்கள் அடுத்த விருந்து எப்போது என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்த பெங்கெல்லி அடுத்த முறை மாட்டுக்கறி சமைக்க உள்ளதாவும் அதை இரண்டு மணி நேரத்தில் சமைத்திடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Australia man cooked pork roast inside an old Datsun Sunny for 10 hrs on a 39degree day.It worked a treat!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X