For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கலில் ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: இலங்கை தமிழ் அகதிகளும் பாதிப்பு?

ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம் சிக்கலில் உள்ளதாகவும், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அதனை ஏற்றுக் கொள்வாரா எனவும் சர்ச்சை எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்/மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுடன் ஏற்படுத்தப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தை அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக் கொள்வாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்தார்.

Australia-US refugees agreement on the issue , the new US president Trump admits?

அதன்படி படகு வழியே ஆஸ்திரேலியா வர முயற்சித்து அந்நாட்டின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதற்கு முந்தைய கணக்குள் படி, ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களான மனுஸ்தீவில் 675 அகதிகளும்; நவரு தீவில் 941 அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழ் அகதிகளும் இடம்பெற்றுள்ளார்கள்.

இது ஒரே முறை மட்டுமே செய்யப்படும் ஏற்பாடு என்று தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமரிடம், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதை ஏற்றுக்கொள்வாரா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, ஒரு சமயத்தில் ஒரு அதிபரிடம் தான் எங்களால் பேச முடியும் என்றார் அவர். ஆனால், தற்போது இந்த அகதிகள் ஒப்பந்தத்தை டிரம்ப் நிராகரிக்க மாட்டார் என தாம் நம்புவதாக குறிப்பிட்டார் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் எரிக் ஷூல்ட்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் இது சம்பந்தமான கொள்கைகளை வகுப்பார் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அகதிகள் செயல் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐன் ரிண்டோல், டிரம்ப்பின் வெற்றியை இவர்கள் எதிர்பார்க்கவில்லை, அதனால் ஒப்பந்தத்தின் நிலை என்னவாகும் என்பது தெளிவாக தெரிகிறது என விமர்சித்திருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தின் மீது அவர் என்ன முடிவினை எடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் அகதிகளுக்கு எதிராகவும் புலம்பெயர்பவர்களுக்கு எதிராகவும் டொனால்ட் டிரம்ப் கடுமையான கருத்துகளை கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Wasington/Melbourne: Australia-US refugees agreement on the issue , the American new president Trump admits?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X