For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீர் பாட்டில்களில் இந்துக் கடவுள்களின் படங்கள்: மன்னிப்பு கேட்டு நீக்கிய ஆஸ்திரேலியா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: இந்துக்கடவுளின் படங்களை பீர் பாட்டில் லேபிள்களில் அச்சிட்ட ஆஸ்திரேலியா மதுபான நிறுவனம், இந்துக்களின் எதிர்ப்பினை அடுத்து மன்னிப்பு கேட்டதோடு கடவுள் படங்களை நீக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய விநாயகர், லட்சுமி, நெற்றிக்கண், பாம்பு போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலியாவாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Australian brewery apologizes over Hindu deities on beer labels

இத்தகைய தெய்வ உருவங்களை மதுபாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்துமதக் கடவுள்கள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துதல் கூடாது. இந்த செய்கை இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பீர் பாட்டில்களை அந்த மதுபான நிறுவனம் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, இந்துக் கடவுள்களின் உருவம் அச்சடித்த லேபிள்களுடன் இனி அந்த பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இணையதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது.

English summary
An Australian brewery has apologized for using images of Hindu deities on its alcoholic ginger beer bottles after the labels provoked outrage from Hindu devotees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X