For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி ஆகிவிட்டாரே.. விபத்தில் சிக்கினார் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன்!

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மேத்யூ ஹெய்டனை யாரும் மறக்க மாட்டார்கள். என்னதான் இந்திய அணிக்கு எப்போதும் டஃப் கொடுத்தாலும் இவரது ஆட்டத்திற்கு இந்தியாவில் பல்லாயிரம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஓய்வு பெற்று வாழ்க்கையை கழித்துவரும் இவர் விபத்து ஒன்றில் சிக்கி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் நார்த் ஸ்டிராட்பிரோக் தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஃசர்ஃபிங் விளையாட்டின் போது

ஃசர்ஃபிங் விளையாட்டின் போது

நார்த் ஸ்டிராட்பிரோக் தீவு ஃசர்ஃபிங் விளையாட்டிற்கு பிரபலம் ஆகும். இந்த நிலையில் இதில் இவர் கலந்து கொள்ள தனது மகனுடன் சென்றுள்ளார். கடந்த மூன்று நாட்களாக அவர் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சர்ஃபிங் விளையாட்டின் போதுதான் இவருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

எப்படி விழுந்தார்

எப்படி விழுந்தார்

வேகமாக கரைக்கு வரும் போது தடுமாறி மணல் திட்டில் மோதியுள்ளார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக முதுகெலும்பு, கழுத்தெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. முகத்திலும் மோசமாக அடிபட்டு இருக்கிறது.

சிகிச்சை பெற்றுவருகிறார்

இதனால் மேத்யூ ஹெய்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதுகு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கு நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் சரியாகும்

இவர் விபத்திற்கு பின் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது பார்க்கவே கோரமாக இருக்கிறது. இவர் விரைவில் குணமடையாக வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Australian cricketer Matthew Hyden met with an accident in an Island.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X