For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் கார்டூன்: 'தி ஆஸ்திரேலின்' நாளிதழுக்கு வலுக்கிறது கண்டனம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா மேற்கொண்ட நிலையை கிண்டல் செய்யும் வகையில் 'தி ஆஸ்திரேலின்' என்ற பத்திரிக்கை இனவிரோத கார்டூனை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழான 'தி ஆஸ்திரேலின்' பருவ நிலை மாநாட்டை முன்னிட்டு இந்திய மக்களை மிகவும் கேவலமான முறையில் சித்தரிக்கும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களிலும் உலகளவில் உள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Australian daily's 'racist' cartoon shows Indians eating solar panels

அண்மையில் பாரிசில் நடந்த பருவ நிலை மாநாடு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "பருவநிலை மாற்றம் குறித்து இந்தியா தெரிவித்த கவலைகள் எதுவும் அதன் வரைவு அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் தாமாக முன்வந்து உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனை சேர்க்கப்படவில்லை.

மேலும், வளர்ந்த நாடுகள் அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவதை தடுக்க வேண்டும், புவிவெப்பமடைதலை தடுக்க வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும் போன்ற இந்தியாவின் யோசனைகளையும் சேர்க்கவில்லை. இந்த யோசனைகளை ஏற்றால், 186 நாடுகள் மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க இயலும். நீடிக்கத்தக்க வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதும் வரைவு அறிக்கையில் இடம்பெறவில்லை." என்றார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, அம்மாநாட்டில் இந்தியா சார்பில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை தொடங்கி வைத்தார். இந்நிலையில், பருவ நிலை மாநாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை கேலிக்கூத்தாக்கும் வகையில் முன்னணி ஆஸ்திரேலிய நாளிதழான ‘தி ஆஸ்திரேலியன்' பசியில் வாடும் இந்தியர்கள் சோலார் பேனல்களை சுத்தியலால் உடைத்து தின்பது போன்ற கார்ட்டூனை வெளியிட்டுள்ளது ‘பில் லிக்' என்பவர் இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார்.

இந்த கேலிச்சித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் பசியில் வாடும் இன்னொரு இந்தியரோ, மாங்காய் சட்னியை தொட்டுக் கொண்டால் இது இன்னும் சுவையாக இருக்கும் என்று கூறுகிறார். கார்ட்டூனில் உள்ள சோலார் பேனல் பெட்டியில் ஐ.நா. வின் இலச்சினையும் ‘மேட் இன் சைனா' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இது உலகளவில் பெரும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் சமூக ஆர்வலர்கள் இதில் விஷமத்தனமான இனவெறி நிரம்பிய கார்ட்டூன் என்று இந்த கார்ட்டூனை சாடியுள்ளனர்.

English summary
A cartoon depicting Indians eating solar panels published in an Australian daily on Monday has attracted strong criticism owing to its "racist" overtone, a media report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X