For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரனைக் கடந்து போன சர்வதேச விண்வெளி நிலையத்தை அழகாக படம் பிடித்த ஆஸி. போட்டோகிராபர்

Google Oneindia Tamil News

சிட்னி: சந்திரனை சர்வதேச விண்வெளி நிலையம் கடந்து போன அற்புதமான தருணத்தைத் தனது கேமராவில் பதிவு செய்திருக்கிறார் ஆஸ்திரேலிய போட்டோகிராபர் டைலான் ஓ டோன்னெல்.

பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து அந்த பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த சர்வதேச விண்வெளி நிலையமானது மணிக்கு 27,600 கிமீ வேகத்தில் 92.91 நிமிடங்களில் பூமியைச் சுற்றி வருகிறது. மேலும் அது சந்திரனை 0.33 விநாடிகளில் சுற்றி வந்து விடும்.

இவ்வளவு அதி வேகமாக சந்திரனை சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றி வந்த சமயத்தில் அதை படம் எடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டைலான் ஓ டோன்னெல் என்ற போட்டோகிராபர்.

இதுகுறித்து டைலான் கூறுகையில், சூப்பர் ஹேப்பியாக உணர்கிறேன். நிலவைச் சுற்றி வந்த சர்வதேச விண்வெளி நிலையம் ஷில் அவுட்டில் அழகாக காட்சி தருகிறது. இந்தப் படத்தை எடுப்பது கடினம். ஆனால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன், ரிசல்ட் அருமையாக வந்ததற்காக என்றார்.

English summary
An Australian photographer has clicked a breathtaking image of the International Space Station (ISS) as it was passing over the Moon. It took Dylan O'Donnell almost a year to get the stunning image, Daily Mail reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X