For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கத்தை தேடி சென்றவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. இது என்ன கல்.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்

Google Oneindia Tamil News

கான்பெரா: தங்கத்தை தேடி அலைந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளருக்கு அதை விட மதிப்பு மிக்க விண்கல் ஒன்று கிடைத்துள்ளது. நிக்கல் உள்ளிட்ட கனிமங்களை உள்ளடக்கிய இந்த விண்கல் மூலம் சூரிய குடும்பத்தின் தோற்றம் அறிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டேவிட் ஹோலே. இவர் 2015- ஆம் ஆண்டு மெல்போர்ன் பகுதியில் தங்கம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அலைந்து திரிந்துள்ளார்.

இவர் ஆசைப்பட்டது போலவே, ஒரு பெரிய கடினமான கல் ஒன்று டேவிட் ஹோலே கண்ணில் தென்பட்டது.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது மலர்ந்த காதல்.. கர்நாடக ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த பெல்ஜியம் இளம்பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது மலர்ந்த காதல்.. கர்நாடக ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த பெல்ஜியம் இளம்பெண்

உடைக்க முடியாத கல்

உடைக்க முடியாத கல்

தேடி வந்த தங்கம் கிடைத்து விட்டது என்ற ஆர்வத்தில் அவரும் அந்தக் கல்லை எடுத்து இருக்கிறார். எடையும் அதிகமாக இருந்ததால் எப்படியும் கல்லை உடைத்தால் அதற்குள் தங்கம் இருக்கும் என்று கருதி உடைக்க முயற்சித்து இருக்கிறார். பெரிய ரம்பம் கொண்டும்.. சம்மட்டி கொண்டு அடித்து பார்த்து இருக்கிறார். ஏன் ஆசிட் ஊற்றிக் கூட கரைத்து விடலாம் என்று அதையும் முயற்சித்து இருக்கிறார். ஆனாலும் கொஞ்சம் கூட அந்த கல்லை உடைக்க முடியவில்லை. இதனால், ஏமாந்துவிட்டமோ என்று கூட அவர் எண்ணியிருக்கலாம்...

அரிய மதிப்புமிக்க கல்

அரிய மதிப்புமிக்க கல்

உடைக்க முடியாததால், இதை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகுதான் அவருக்கு தெரிந்து இருக்கிறது. இது தங்கத்தை விட விலைமதிப்பு மிக்க ஒரு விண்கல் என்று தெரியவந்து இருக்கிறது. சூரிய குடும்பம் உருவாவதற்கு முந்தைய கால காட்டத்தை சேர்ந்த விண்கல் அரிய மதிப்புமிக்க கல் என்று.. மழைத்துளிகள் மூலமாக பாறையாக மாறியுள்ளது இந்த அதிசய கல். இதன் மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய

வளிமண்டலம் வழியாக வரும் போது வெளிப்புறத்தில் உருகி அதன்பிறகு ஒன்று திரண்டு இப்படி அரிய கல்லாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக மெல்போர்னில் உள்ள அருங்காட்சியகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் மெர்மோத் ஹென்ரி கூறுகையில், "இந்த பாறை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த விண்கல் ஆக இருக்கக்கூடும்" என்று கூறியுள்ளார். இந்த கல்லில் உள்ள இரும்பு மற்றும் நிக்கல் காரணமாகவே இவ்வளவு கடினமாக இந்த விண்கல் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெள்ளிநிற மழைத்துளிகள்

வெள்ளிநிற மழைத்துளிகள்

இந்த விண்கல் 'மேரிபரோ விண்கல்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆய்வாளர் ஹெண்ட்ரி இந்த பாறைக்கற்களின் ஒரு முனையில், வைரங்களை வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களை கொண்டு உடைத்து பார்த்து இருக்கிறார். இதில், குறுக்கு வடிவத்தில் சிறிய வெள்ளிநிற மழைத்துளிகள் இருந்து இருக்கின்றன. சிலிகேட் கனிமங்களை உள்ளடக்கிய இந்த விண்கல் ஆய்வின் மூலம் சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பது குறித்து நம்மால் இங்கே பார்க்க முடிகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மர்மத்தை கண்டுபிடிக்கும் பணியில்

மர்மத்தை கண்டுபிடிக்கும் பணியில்

நாம் வாழும் பூமியில் கூட இன்னும் அறியப்படாத பல அதிசயங்கள் நிறைந்து கிடக்கின்றன. இந்த அதிசயங்களுக்குள் மறைந்து கிடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். இருந்தாலும், பல இயற்கை பேரதிசயங்களுக்கு இன்னும் கிடைத்த பாடில்லை என்பதுதான் விஞ்ஞானிகளின் வாதமாக இருக்கிறது.

சூரிய குடும்பம் உருவான ஆய்வுக்கு

சூரிய குடும்பம் உருவான ஆய்வுக்கு

அந்த வகையில், சூரிய குடும்பம் உருவான கால கட்டத்தை சேர்ந்த விண்கல் கடந்த 2019- ஆம் ஆண்டு கிடைத்துள்ளது. உடைக்க முடியாத அளவுக்கு மிகவும் கடினமாக உள்ள இந்த பாறைகுறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் கிடைக்கும் முடிவுகள் சூரிய குடும்பம் உருவான ஆய்வுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் விஞ்ஞானிகள் தரப்பு நம்பிக்கையாக இருக்கிறது.

English summary
An Australian explorer searching for gold has found a more valuable meteorite. Scientists say that the origin of the solar system can be known through this meteorite containing minerals including nickel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X