For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

55 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'மீல்ஸ்'.. இதுதான் மிக பழமையான உணவு!விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 'அதிசயம்'

Google Oneindia Tamil News

கேன்பெரா: உலகின் மிக பழைமையான உணவை (meal) ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சுமார் 55 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கு 2018ல் பழைய உயிரினத்தின் படிமம் ஒன்று கிடைத்திருக்கிறது.

இதனை ஆய்வு செய்து பார்க்கையில்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த தகவல்களை 'Current Biology' எனும் ஆய்வு இதழ் வெளியிட்டிருக்கிறது.

பசியின் கோரம்.. தெரு நாய்கள் சாப்பிட்டு மிஞ்சிய உணவை சாப்பிட்ட முதியவர்.. ஓடோடி உதவிய இளைஞர் பசியின் கோரம்.. தெரு நாய்கள் சாப்பிட்டு மிஞ்சிய உணவை சாப்பிட்ட முதியவர்.. ஓடோடி உதவிய இளைஞர்

55 கோடி

55 கோடி

இந்த உலகம் சுமார் 453 கோடி ஆண்டுகள் பழமையானதாகும். இவ்வாறு இருக்கையில் பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வினை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ரஷ்ய கடற்கரைகளில் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது ஒரு புதைபடிமத்தை கண்டுபிடித்திருக்கின்றனர். இதன் வயது 55 கோடியாகும். அதாவது இந்த புதைபடிமத்தில் உள்ள உயிரினம் 'எடியாகாரன்' காலத்தைச் சேர்ந்தவையாகும். உலகம் உருவான பின்னர் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயிர்கள் உருவாக தொடங்கின.

எடியாகாரன்

எடியாகாரன்

அப்படி முதலில் உருவானவை ஒரு செல் உயிரிகள். இதற்கடுத்து பல செல் உயிரினங்கள் உருவாகின. இக்காலகட்டம் 'எடியாகாரன்' காலம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இக்காலகட்டங்களில் தோன்றிய உயிரினங்கள் 'எடியாகாரன்' காலத்து உயிரினங்கள் என்ற வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தை சேர்ந்த உயிரினத்தின் படிமத்தைதான் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 2018ல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பழமையான உணவு

பழமையான உணவு

இந்நிலையில் தற்போது சில விஷயங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, இந்த உயிரினத்தின் குடலில் பாதுகாக்கப்பட்ட 'பைட்டோஸ்டெராலின்' மூலக்கூறுகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'பைட்டோஸ்டெரால்' மூலக்கூறுகள் தாவரங்களின் சத்து நிறைந்த செழிப்பான பகுதியாகும். எனவே இந்த உயிரினம் தானாக உணவை உற்பத்தி செய்துகொள்ளாமல் வெளியிலிருந்து உணவை எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த உயிரினம் எடுத்துக்கொண்ட இந்த தாவர உணவுதான் உலகின் மிக பழமையான உணவு என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கிம்ரெல்லா

கிம்ரெல்லா

இதனையடுத்து இந்த வகை உயிரினங்கள் 'கிம்பெரெல்லா' பிரிவை சார்ந்தவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளதாவது, "கிம்பெரெல்லா வகை உயிரினங்கள் பார்ப்பதற்கு அட்டை போன்று இருக்கும். முழுக்க முழுக்க கடல்வாழ் உயிரினம் என்பதால் நீந்துவதற்கு ஏற்ற உடலமைப்பை பெற்றிருக்கும். மேலும், கடலின் அடியில் உள்ள பாசிகளும், தாவரங்களும்தான் இதன் பிரதான உணவாகும். கடல் அடியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் இதன் உடலமைப்பு இதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கலாம். மட்டுமல்லாது இது அட்டை போன்று இருந்தாலும் அந்த அளவுக்கு சிறியதாக இருந்திருக்காது கொஞ்சம் பெரிய அளவில் இருந்திருக்கக்கூடும்.

முழுமையான ஆய்வு

முழுமையான ஆய்வு

இந்த வகை உயிரினங்களுக்கு முன்னர் வந்த உயிரினங்கள் அனைத்தும் ஒற்றைச் செல் உயிரினங்கள். இது மட்டும் பல செல் உயிரினம் என்பதால் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் ஆரம்ப காலத்தில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி எப்படி இருந்தது என்பது குறித்து நம்மால் மேலும் தெளிவாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். ஆனால், ஆய்வுகள் இன்னும் முழுமையடையவில்லை. கிம்பெரெல்லாவின் குடலின் மூலக்கூறுகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இந்த உயிரினத்தின் உணவு முறை என்ன என்பது குறித்து சரியாக கூற முடியும். ஆனால் அதுவரை இதுதான் மிகப்பழமையான உணவு" என GFZ German Research Center விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

English summary
Scientists from Australia have discovered the oldest meal in the world. They also say that it may be around 55 million years old. Scientists from the Australian National University conducted a related study. They found a fossil of an ancient creature in 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X