For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால்கொடுப்பது அவமானமா?...நாடாளுமன்றத்தில் பாலூட்டிக் கொண்டே பேசிய செனட் உறுப்பினர்!

பொது இடம் என்பதால் குழந்தைக்கு பால் கொடுப்பதை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கு ரோல்மாடலாக மாறியுள்ளார் ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கன்பரா : குழந்தைக்கு பாலூட்டுவதாகவே இருந்தாலும் பொது இடம் என்றால் ஒரு வித தயக்கத்துடனே இருக்கும் பெண்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசி அசத்தியுள்ளார் பெண் அரசியல்வாதி.

பொதுவாகவே மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர். இதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. ஆனால் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் இதில் விதிவிலக்கு.

Australian senator Larissa addressed the parliament while breastfeeding

ஜூன் 22ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வாட்டர்ஸ் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சபாநாயகர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் பதற்றமோ தயக்கமோ இல்லாமல் எழுந்த அவர் குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்து அதை நிறைவேற்றவும் செய்துள்ளார்.

வாட்டர்ஸ் போன்று அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் இது போன்று துணிச்சலான செயலை செய்துள்ளதை பெண்கள் தங்களுக்கான உத்வேகமாக நினைக்க வேண்டியுள்ளது. பொது இடமாக இருந்தால் என்ன? யாரோ ஒருவரை நினைத்து நம் பிள்ளைக்கு பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டுமா என்றும் வாட்டர்ஸ் கேள்வி எழுப்புகிறார்.

நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெற்றுள்ளார் இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், மே 10ம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போதும் இதே போன்று நாடாளுமன்றத்தில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என்று அந்த நாடு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெண்களின் பங்களிப்பை நாடாளுமன்ற செனட் சபையில் அதிகரிக்கச் செய்வதே இதன் முக்கியத்துவம் என்று இந்த சட்டம் அமல்படத்தப்பட்டது.

English summary
Australian senator Larissa Waters just did something extraordinary, she addressed the Parliament while breastfeeding her daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X