For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்வி பயிலும் இடமாகிறது சர்வாதிகாரி ஹிட்லர் பிறந்த வீடு...

Google Oneindia Tamil News

ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் பிறந்த வீட்டை பள்ளிக்கூடமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.

பல்வேறு தீய செயல்களை செய்து உலக மக்களின் மனதில் கொடுங்கோலனாக சரித்திரத்தில் சர்வாதிகாரியாக பதிவாகியுள்ளவர் அடால்ப் ஹிட்லர். அவர் செய்த யூத இன அழிப்பும், உலக ஆக்கிரமிப்பு அடாவடிகளும் சொல்லிடங்காதது.

தொடர் தோல்விகளைச் சந்தித்த ஹிட்லர் கடந்த 1945 ல் நடந்த பெர்லின் போரின் போது தற்கொலை செய்து கொண்டதாகவும், இல்லை 95 வயது வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன.

இந்நிலையில், அவரது வீட்டை கல்வி பயிலும் இடமாக மாற்றியுள்ளது ஆஸ்திரிய அரசு.

ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர்...

ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர்...

ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்தவர். தனது குழந்தைப் பருவத்தை அங்கு தான் ஹிட்லர் கழித்தார்.

சமுதாயக் கூடம்...

சமுதாயக் கூடம்...

இந்த வீடு கடந்த 2 ஆண்டுகளாக சமுதாயக்கூடமாக செயல்பட்டு வந்தது. இங்கு படிப்பறிவு பெற இயலாதவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது.

பள்ளிக்கூடமானது...

பள்ளிக்கூடமானது...

இந்தநிலையில் இந்த வீட்டை வெளிநாடுகளில் இருந்து குடியேறிய மக்களுக்கு, மொழிப்பாடம் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடமாக மாற்ற ஆஸ்திரிய அரசு திட்டமிட்டுள்ளது.

புனித தலமாக மாற்ற கோரிக்கை...

புனித தலமாக மாற்ற கோரிக்கை...

முன்னதாக ஹிட்லரின் நாசிக் கட்சியினர் இந்த வீட்டை ஹிட்லரின் நினைவாக புனிதத்தலமாக மாற்ற வேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், அதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்து விட்டது.

வாடகை வீடாக்க மறுப்பு...

வாடகை வீடாக்க மறுப்பு...

மேலும், ஹிட்லர் வீட்டை மக்கள் வசிக்கும் வாடகை வீடாக மாற்றவும் அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After two years of standing empty, the house where Adolf Hitler was born and spent his toddler years appears to be on the verge of being repurposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X