For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெச்.ஐ.வி ரத்தத்தில் கவர் படம்... எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஜெர்மனி செய்தித்தாளின் நூதன முயற்சி

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் முழுக்க, முழுக்க ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்ததினால் மாதப்பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ், உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பல நாடுகளிலும் மிக மிக குறைவாக உள்ளது. மக்களிடையே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

Austrian magazine printed with HIV blood

அந்த வகையில் ஆண்களுக்கான ஜெர்மனி மாதப்பத்திரிகை ஒன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. "வங்கார்டிஸ்ட்" என பெயரிடப்பட்டு உள்ள அந்த பத்திரிகை, ஹெச்.ஐ.வி. வைரஸ் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த சிறப்பு பதிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்த இதழ் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகளுடனான பேட்டிகள், அவர்களது அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளன. இதில் முக்கிய அம்சமாக ஹெச்.ஐ.வி. வைரஸ் தாக்கிய ரத்தம் கலந்த மையினால் பத்திரிகையின் அட்டைப்படம் அச்சிடப்பட்டது. இதற்காக ஹெச்.ஐ.வி. பாதித்த 3 பேர் ரத்தம் கொடுத்து உள்ளனர்.

எய்ட்ஸ் பாதித்த நபரை தொடுவதனால் இந்த வைரஸ் பரவாது என்பதை மக்களிடம் உணர்த்துவது இதற்கான நோக்கங்களில் ஒன்றாகும்.

English summary
An Austrian men's magazine has printed its latest edition using blood from people who are HIV-positive in order to counter the "stigma" often attached to the virus that causes AIDS, its chief editor said Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X