For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆல்ப்ஸ் மலையில் ஒரு பிரசவம்.. மலை ஏறும் குழுவினரே பார்த்த பிரசவம்.. தாயும், சேயும் நலம்!

Google Oneindia Tamil News

வியன்னா: ஆஸ்திரியாவின், ஆல்ப்ஸ் சிகரத்தில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு பெண்ணுக்கு, மலை ஏறும் குழுவைச் சேர்ந்த 15 பேர் இணைந்து, மகப்பேறு மருத்துவருடன் இணைந்து பிரசவத்திற்கு உதவி உள்ளனர்.

30 வயதான அப்பெண்மணி சிகரத்தில் அமைந்துள்ள முகாமிற்கு செவ்வாய் கிழமையன்று அழைத்து வரப்பட்டார். ஆனால், தட்பவெப்ப நிலை மோசமாக இருந்ததால் அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கீழே அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முகாமில் வைத்தே அவருக்குப் பிரசவம் பார்க்க தீர்மானிக்கப்பட்டது.

இதையுத்து அப்போது முகாமில் இருந்த 15 மலை ஏறும் குழுவினர் இணைந்து அவர்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

"அக்குழுவினர் அப்பெண்ணை கிட்டதட்ட 2250 மீட்டர்கள் சுமந்து கொண்டு முகாமுக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அவரை புல்தரையில் படுக்க வைத்து பிரசவம் பார்த்துள்ளனர் மலை ஏறும் குழுவினர்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மலை ஏறும் குழுவுடன் ஒரு மகப்பேறு மருத்துவரும் இணைந்து பிரசவம் பார்க்க உதவியுள்ளார்.

பிரசவம் நல்லபடியாக முடிந்த நிலையில், வானிலை சரியானதால், தாயும், சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

English summary
A team of 15 mountain rescuers accompanied by a gynaecologist had to climb some 2,500 metres above sea level to help deliver a baby, police said yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X