For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவெஞ்சர்ஸ் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத இளம்பெண்.. மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி!

அவெஞ்சர்ஸ் படத்தைப் பார்த்து அழுததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. கிட்டதட்ட 10 வருட அவெஞ்சர்ஸ் சீரீஸின் கடைசிப் படம் இது. இதனால் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் உட்பட உலக மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடனும், உணர்ச்சிவயப்பட்டும் படத்தை பார்த்து வருகின்றனர்.

avengers endgame chinese woman hospitalised

மற்ற நாடுகளைப் போலவே இந்த திரைப்படம் சீனாவிலும் திரையிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் நிங்போ நகரில் இப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு சென்று அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் பார்த்துள்ளார் ஸியாலி என்ற கல்லூரி மாணவி.

அதி தீவிர புயலாக மாறிய ஃபனி.. சென்னை மெரினா கடற்கரையில் முழு உஷார் நிலை அதி தீவிர புயலாக மாறிய ஃபனி.. சென்னை மெரினா கடற்கரையில் முழு உஷார் நிலை

படத்தில் இடம்பெற்றுள்ள உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்டு இளகிய மனம் படைத்தவரான ஸியாலி, தேம்பித் தேம்பி அழுதுள்ளார். இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் முதலுதவி அளித்தனர்.

பின்னர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் கதையை படம் பார்க்க வந்தவர்களிடம் சத்தமாக கூறியதால் ஏற்பட்ட கைகலப்பு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. இது படத்திற்கு பெரும் புரமோஷனாகவும் அமைந்துள்ளது.

English summary
A 21-year-old Chinese woman who saw the film Avengers: Endgame, got so overwhelmed that she couldn’t stop crying and had to be hospitalised.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X