For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீருக்காக பேரணி.. பாகிஸ்தானியர்கள் மீது வழக்கு.. பக்ரைன் அரசு வெளியிட்ட பரபரப்பு டுவிட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Bahrain warns pakistanis | பாகிஸ்தானியர்கள் மீது வழக்கு.. பக்ரைன் வெளியிட்ட டுவிட்- வீடியோ

    மனாமா: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது கண்டித்து போராட்டம் நடத்தியது சட்டவிரோதம் என பாகிஸ்தானியர்கள் மீது பக்ரைன் அரசு வழக்கு போட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவையும் 35 ஏ பிரிவையும் மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இந்த விவகாரம் பாகிஸ்தானியர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசு இந்தியாவின் செயலை கண்டித்து தூதரக உறவை முறித்துக்கொண்டது. அத்துடன் வர்த்தக உறவையும் துண்டித்துக்கொண்டது.

    மேலும் பாகிஸ்தான் தலைவர்கள் பலரும் காஷ்மீரில் நடந்து வருவது சுதந்திர போராட்டம் என்று பேசி இந்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    யானை, சிறுத்தை இருக்கு.. உயிர்ப் பலி ஏற்பட்டால் நாங்க பொறுப்பில்லை.. எச்சரிக்கும் வனத்துறை! யானை, சிறுத்தை இருக்கு.. உயிர்ப் பலி ஏற்பட்டால் நாங்க பொறுப்பில்லை.. எச்சரிக்கும் வனத்துறை!

    சீனாவும் அமைதி

    சீனாவும் அமைதி

    எனினும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எந்த நாடும் இதுவரை பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அமெரிக்கா கண்டும் காணாமல் ஒதுங்கிக்கொண்டது. சீனாவும் அமைதியாக இருக்கிறது.

    இந்தியாவுக்கு ஆதரவு

    இந்தியாவுக்கு ஆதரவு

    இந்நிலையில் அரபு நாடுகளில் ஒன்றான பக்ரைன் அரசும் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்ரைன் தலைநகரில் மனாமாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    காஷ்மீருக்காக பேரணி

    காஷ்மீருக்காக பேரணி

    அப்போது புனித தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் ஜம்மு காஷ்மீர் விவாகரத்தில் இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அனுமதியின்றி பேரணி சென்றர். இதையடுத்து சட்டவிரோதமாக பேரணி நடத்திய பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்க தேசத்தினர் மீது அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல பக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உள்துறை அமைச்சகம்

    உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் அரசியல் நோக்கங்களுக்காக மத விவாகரத்தை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

    English summary
    Bahrain warns and takes action against Pakistanis who held rally for Kashmir issue after Eid prayers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X