For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.முன்னாள் அதிபர் முஷரப்புக்கு கொலை வழக்கில் பிடிவாரண்ட் !

நவாஷ் அக்பர் கான் புக்தி கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பலுசிஸ்தான் உயர்நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

கராச்சி: பலுசிஸ்தான் தலைவர் கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பலுசிஸ்தான் மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சரும், பழங்குடி இனத்தின் தலைவருமான நவாஷ் அக்பர் கான் புக்தி கொலை கொல்லப்பட்டார். இதனால் அங்கு 2004-ல் நடைபெற்று வந்த ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி இவரது கொலைக்கு பிறகு தீவிரமடைந்தது.

 Balochistan High Court issues arrest warrant against Pervez Musharraf

இந்த சம்பவத்தில் அப்போதைய அதிபரான பர்வேஸ் முஷரப், உள்துறை அமைச்சர் அப்தாப் கான் ஷெர்போ, முன்னாள் மாகாண உள்துறை அமைச்சர் சோயிப் நுஷேர்வன் உள்ளிட்டோரைக் கைது செய்யக்கோரி பலுசிஸ்தான் மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து முஷரப் உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷரப்புக்கு ஜாமீனில் வரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.

English summary
The Balochistan High Court on Monday issued a bailable arrest warrant against former former Pakistan Prime Minister General Pervez Musharraf
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X