For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் “நீச்சல் உடை” அணிய கடும் எதிர்ப்பு – தடை செய்து விரைவில் தீர்மானம்

Google Oneindia Tamil News

துபாய்: குவைத்தில் பெண்கள் பிகினி உடை அணியத் தடை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் பாராளுமன்றக் குழு ஒன்று பொது இடங்களில் இப்படி உடை அணிவதை எதிர்த்து வருகின்றது.

மேலும், ஹோட்டல்களில் பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வண்ணம் ஆடை அணிவதைத் தடை செய்யும் தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளது.

நீச்சல் உடைக்கு நோ:

இந்தத் திட்டத்தினால் பெண்கள் நீச்சலுடையோ, பிகினி உடை அணிவதோ அந்நாட்டில் தடை செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

கலாச்சார சீர்கேடு:

குவைத்தின் சமூக விரோத நடத்தைக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்டன் அல் அசேமி பெண்களின் குளியல் உடை என்பது தங்கள் நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

வரையறை தேவையில்லை:

இத்தகைய பயன்பாடுகள் பொறுத்துக் கொள்ளக் கூடியவை அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் நிர்வாணம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறையும் தேவையில்லை என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கண்ணியம் வேண்டும்:

குவைத்தின் கடற்கரைகளில் கண்ணியம் தேவை என்பது குறித்து அங்குள்ள பழமைவாத உறுப்பினர்களும், அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர். குவைத் சமுதாயத்தின் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவும், பிறரது செயல்களைத் தூண்டும் விதமான நடவடிக்கைகளைத் தவிர்க்கும் விதமாகவும் அங்குள்ள மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஊரின் மரியாதை முக்கியம்:

பிகினி அணிந்து கொள்வது என்பது தனி மனித சுதந்திரத்தையோ, விருப்பத்தையோ வெளிப்படுத்துவதைவிட உள்ளூர் மதிப்புகளையும், நாகரீகம் மற்றும் தன்மானத்தின் உணர்வு மீதான தாக்குதல்களாகவே கருதப்படும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒப்புதலுக்கு காத்திருப்பு:

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றபின்னர் இந்த விதிமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தவிர்க்கப்பட வேண்டும்:

சமீபத்தில் இத்தகைய ஆடை கலாச்சாரம் குறித்து அங்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் புலம் பெயர்ந்த மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீச்சல் குளங்கள், கடற்கரை அல்லாத பகுதிகளில் ஆண், பெண் இருபாலரும் நீச்சல் உடையில் நடைபயிற்சி செல்லுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று இந்த பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது.

English summary
Al Arabiya News reports that the Islamist lawmaker has not given a definition for the term ‘nudity’ but, according to the Kuwait Times, issued a statement ‘strongly criticising women dressed in bikinis at some swimming pools, on beaches and in hotels’ adding that the term ‘also includes revealing or improper dress’.The newspaper added that any proposal must be accepted by the government as well as by the Assembly.A separate proposal to ban bikinis was thrown out by a parliamentary committee as unconstitutional in 2011, the newspaper reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X