For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 200 பேர் பலி?

By Siva
Google Oneindia Tamil News

டாக்கா: வங்கதேசத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வங்கதேசத்தில் உள்ள முஷிகஞ்ச் மாவட்டம் மதாரிபூரில் இருந்து 200க்கும் மேற்பட்டோருடன் படகு ஒன்று பத்மா ஆற்றில் சென்றது. படகு தலைநகர் டாக்காவில் இருந்து 30 கிமீ தொலைவில் சென்றபோது ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மீட்புக்குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புக்குழுவினர் 100 பேரை உயிருடன் மீட்டனர். 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

Bangladesh ferry sinks with up to 200 on board: Police

இது குறித்து மீட்கப்பட்ட ஒருவர் கூறுகையில்,

புயல் எல்லாம் வீசவில்லை. மேக மூட்டமாக இருந்தது. ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது. திடீர் என்று படகு கவிழ்ந்துவிட்டது. நான் ஜன்னல் வழியாக வெளியேறினேன். என்னை மோட்டார் படகில் வந்தவர்கள் காப்பாற்றினார்கள். நான் வந்த படகு மூழ்கிவிட்டது. அதில் சுமார் 350 பேர் இருந்தனர் என்றார்.

வங்கதேசத்தில் உள்ள படகுகளில் பல 1971ம் ஆண்டு செய்யப்பட்டவை. அங்கு படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதால் படகு கவிழ்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கடந்த மே மாதம் படகு ஒன்று கவிழ்ந்ததில் பலர் பலியாகினர். எத்தனை பேர் பலியாகினர் என்ற எண்ணிக்கை இன்று வரை தெரியவில்லை.

English summary
A ferry carrying more than 200 passengers sink in Padma river in Bangladesh. 200 passengers are feared to be dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X