For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உருண்டோடிய 50 ஆண்டுகள்...இனப்படுகொலைக்காக இன்னமும் மன்னிப்பு கேட்காத பாக்... கொந்தளிக்கும் வங்கதேசம்

Google Oneindia Tamil News

டாக்கா: அரை நூற்றாண்டுகள் கடந்து போனாலும் இன்னமும் ஆறாத பெருவடுவாக வங்கதேச மக்கள் அந்த இனப்படுகொலை நாட்களை எண்ணி கொந்தளிக்கின்றனர்.. இன்னொரு பக்கம் 50 ஆண்டுகளாகிவிட்ட போதும் இனப்படுகொலை நிகழ்த்திய ஈவிரக்கமற்ற கொடூரத்துக்கு இன்னமும் பாகிஸ்தானும் மன்னிப்பு கேட்கவில்லை.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானின் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை கோரி முஜிபுர் ரஹ்மான் தலைமையில் வங்கதேச மக்கள் கிளர்ந்து எழுந்தனர். வங்கதேசத்து மக்களின் சுதந்திர தாகத்துக்கு பாரத தேசம் அரவணைப்பு தந்தது.

Bangladesh still demands apology from Pakistan for 1971 genocide

வங்கதேச மக்களின் விடுதலைக்காக 1971-ல் பாகிஸ்தானுடன் பாரதம் யுத்தத்தை நிகழ்த்தியது. யுத்தங்களுக்கு மத்தியில் கல்வியாளர்கள், அப்பாவி பொதுமக்கள் என பல லட்சம் பேரை ஈவிரக்கமே இல்லாமல் பச்சை படுகொலை செய்தது பாகிஸ்தான்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதியை வங்கதேசத்து மக்கள் விடுதலை நாளாக கொண்டாடி தீர்த்தாலும் அவர்களது தலைமுறை தலைமுறையாக இனப்படுகொலை துயரம் ஓய்ந்துவிடவில்லை. இனப்படுகொலைக்கு இன்னமும் நீதி கோரி வங்கதேசம் போராட்டங்களை தொடரவே செய்கிறது.

1971 இந்தியா- பாக். யுத்த வெற்றியின் கொண்டாட்டம்- பொன்விழா ஆண்டு ஜோதியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி1971 இந்தியா- பாக். யுத்த வெற்றியின் கொண்டாட்டம்- பொன்விழா ஆண்டு ஜோதியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி

வங்கதேசத்து வீதிகளில் போராடும் அந்த நியாய உணர்வு கேட்பது எல்லாம் நீதி உணர்வு கோருவது எல்லாம் இனப்படுகொலை நிகழ்த்திய பாகிஸ்தானே பகிரங்க மன்னிப்பு கேள் என்பதுதான். ஆனால் ஒரு அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் கூட பாகிஸ்தான் தமது இனப்படுகொலை நிகழ்த்திய கரங்களில் தோய்ந்தே கிடக்கும் ரத்தக் கறைக்கு பரிகாரம் தேடமுன்வரவில்லை.

பெருமித வரலாறு... விஜய் திவஸ் அல்லது வெற்றி தினம்.. டிசம்பர் 16-ல் ஏன் கொண்டாடப்படுகிறது?பெருமித வரலாறு... விஜய் திவஸ் அல்லது வெற்றி தினம்.. டிசம்பர் 16-ல் ஏன் கொண்டாடப்படுகிறது?

தலைமுறை தலைமுறையாக மனித உரிமைகளுக்காக, மரத்துப் போய்விட்ட மனசாட்சியை தட்டி எழுப்ப இன்னமும் வங்கதேச மண்ணில் இருந்து உரத்து குரல் இப்போதும் எழுந்து கொண்டே இருக்கிறது.. இப்போதும் கூட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்க கோரி மனு அளித்து கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் மனசாட்சி எப்போதுதான் கண்விழிக்குமோ?

English summary
Bangladesh still demands the apology from Pakistan for 1971 genocide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X