For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லீவ் கொடுக்காத இந்திய பாஸ் மீது தாக்குதல்.. துபாயில் நடந்த கொடூரம்!

லீவ் கொடுக்காத காரணத்தால் இந்தியர் மீது துபாயில் தாக்குதல் நடந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    லீவ் கொடுக்காத இந்திய பாஸ் மீது தாக்குதல்- வீடியோ

    அபுதாபி: துபாயில் பெரும்பாலான நிறுவங்களில் இந்தியர்கள் டீம் லீடர், பொறுப்பாளர் அளவில் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல் அங்கு பங்களாதேஷ், பாகிஸ்தானை சேர்ந்த பலரும் கூட வேலை பார்த்து வருகிறார்கள்.

    இதில் பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் தன் மேற்பார்வையாளரை மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார். தாக்கப்பட்ட மேற்பவையாளர் இந்தியாவை சேர்ந்தவர்.

    விடுமுறை கேட்டதற்கு கொடுக்காமல், சம்பளத்தில் பிடித்த காரணத்தால் அவர் இப்படி தாக்கப்பட்டு இருக்கிறார்.

    விடுமுறை கொடுக்கப்பட்டது

    விடுமுறை கொடுக்கப்பட்டது

    துபாயில் இருக்கும் பிஸ்னஸ் பே என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. முதலில் அந்த வங்கதேசத்தை சேர்ந்த பணியாளருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

    சம்பளம் பிடித்தம்

    சம்பளம் பிடித்தம்

    ஆனால் கடைசி நேரத்தில் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கம்பெனி நிறுவனர் அங்கு வருகிறார் என்பதால் விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால் அந்த வங்கதேச நபர் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    மோசமான தாக்குதல்

    மோசமான தாக்குதல்

    இதன் காரணமாக கோபமடைந்த அந்த நபர் தனது இந்திய மேலாளரை தாக்கி இருக்கிறார். மோசமாக காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலில் 5 சதவிகித உறுப்புகள் இனி செயல்படாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

    சிறை

    சிறை

    வங்கதேச நபருக்கு எந்த விதமான அபராதமும் விதிக்கப்படவில்லை. ஆனால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறைத்தண்டனை முடிந்த பின் உடனடியாக வங்கதேசம் திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Bangladesh worker attacks Indian boss in Dubai for not accepting leave. He sentenced 3 months jail for brutal attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X