For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீன் ஜாடி மாதிரி கண்ணாடிக் கூடு.. ‘குடிமகன்’களுக்காக வித்தியாசமாக யோசித்த ஜப்பான் மதுபானக்கூடம்!

ஜப்பான் பார்களில் வாடிக்கையாளர்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க மீன் ஜாடி வடிவிலான கண்ணாடி கூடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் உள்ள பார்களில் மீன் ஜாடி வடிவிலான கண்ணாடி கூடுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றால் உலக பொருளாதாரமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதில் மதுக்கூடங்களும் அடங்கும்.

Bar installs fish bowl-like screens in Japan

கொரோனா அச்சம் காரணமாக மதுக்கூடங்களில் முன்பு போல் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூடுவதில்லை. பலரும் தங்களுக்கு பிடித்த மது வகைகளை வீட்டுக்கு வாங்கிச் சென்று அருந்துகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள மதுக்கூடம் ஒன்றில் வித்தியாசமான யோசனை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இருக்கையில் அமரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்களது முகத்தை முழுமையாக மூடும் வகையில் மீன் ஜாடி வடிவிலான கண்ணாடி கூடுகளை பயன்படுத்துகின்றன.

இ - பாஸ் வேண்டாம்.. தனிமைப்படுத்த தேவை இல்லை.. கட்டுப்பாடுகளை நீக்கிய கர்நாடக அரசு.. அதிரடி!இ - பாஸ் வேண்டாம்.. தனிமைப்படுத்த தேவை இல்லை.. கட்டுப்பாடுகளை நீக்கிய கர்நாடக அரசு.. அதிரடி!

அந்த கண்ணாடி கூடு வாடிக்கையாளருக்கு முகக்கவசம் போல் செயல்படுகிறது. மேலும் ஒவ்வொரு இருக்கைக்கு இடையேயும் போதிய சமூக இடைவெளி அமைக்கப்பட்டுள்ளன. மது அருந்தும் கோப்பை, சைடிஷ் பரிமாறப்படும் பவல்கள் என அனைத்தும் தனித்தனியே வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த பயமும் இன்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டே நிம்மதியாக மது அருந்த முடியும் என்கிறது அந்த பார் நிர்வாகம்.

இந்தியாவை பொருத்தவரையில் மதுக்கடைகளை திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுக்கூடங்கள் அனைத்தும் கடந்த ஐந்து மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் நம்மூரிலும் மதுக்கூடங்கள் திறக்கப்படுமா? என்பது சந்தேகமே.

English summary
A bar in Tokyo’s upscale Ginza district has installed fish bowl-like screens designed to protect against coronavirus transmission, aiming to lure back clients worried about the risks of COVID-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X