For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் படுக்கை வசதி, சுத்தமான கழிப்பறை போன்ற வசதிகள் இல்லையாம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கைதுசெய்யப்பட்ட நவாஸ் ஷெரிப், மாறியதும் பி பிரிவு சிறை

    லாகூர்: பாதகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் படுக்கை வசதி, சுத்தமான கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை என்று அவரது மகன் ஹுசைன் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

    பனாமா பேப்பர்ஸ் வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். அவரது மகள் மரியத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    Bathroom Not Cleaned In Jail, Alleges Nawaz Sharifs Son

    நவாஸ் ஷெரிப்பின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை லண்டனிலேயே விட்டுவிட்டு நவாஸ் ஷெரீபும் அவரது மகளும் பாகிஸ்தான் திரும்பினர்.

    அப்போது லண்டனில் இருந்து அபுதாபி வழியாக லாகூர் விமான நிலையம் வந்த இருவரும் வெள்ளிக்கிழமை இரவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

    விஐபிகளான இவர்களுக்கு, சிறையில் பி பிரிவு வசதி கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டிவி, பிரிட்ஜ், ஏசி போன்ற வசதிகளை சொந்த செலவில் வாங்கி வைத்துக்கொள்ள, பி பிரிவு கைதிகளுக்கு அனுமதியுள்ளது.

    ஆனால் அவருக்கு ஏசி, டிவி, ஏன் சிங்கிள் செய்தித்தாள் கூட படிப்பதற்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படுக்கை வசதியும் வழங்கப்படவில்லையாம். மாறாக கழிப்பறையும் அசுத்தமாக இருப்பதாக நவாஸின் மகன் ஹுசைன் குற்றம்சாட்டினார்.

    English summary
    Nawaz Sharif's son Hussain Nawaz Sharif says that I am told that my father was not given a bed to sleep on and the bathroom was extremely dirty probably not cleaned for ages. There’s no precedence of treating people’s representatives with dignity in this country but these are basic rights withdrawal of which constitutes torture.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X