For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக தவறான செய்தி... மன்னிப்பு கோரிய பி.பி.சி.

Google Oneindia Tamil News

லண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்தார் என்று பி.பி.சி., செய்தியாளர் வெளியிட்ட செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.பி.சி. செய்தியாளர் ஆமன் க்வாஜா டுவிட்டரில் இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக செய்தியை போட்டு விட்டார். இதனைக் கண்ட இங்கிலாந்து மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் பரபரப்பிலும் ஆழ்ந்தனர்.

BBC claims apologise to make False news that Queen Elizabeth passed away

இது குறித்து தகவல் அறிந்த பி.பி.சி. நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்டது. ஒத்திகைக்காக தமது நிருபர், அனுப்பிய தகவல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சமூக வலைதளத்திற்கு நுழைந்து விட்டதாக பி.பி.சி. நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தவறான செய்தி குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட செய்தியில், 'ராணி நலமுடன் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அவர், வழக்கமான பரிசோதனைக்கு, மருத்துவமனைக்கு சென்று, அரண்மனைக்கு திரும்பி விட்டார் எனவும் அறிக்கை வெளியிட்டு பரபரப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

English summary
The BBC apologises and launches an internal inquiry after a tweet sent from the account of one of its producers said Queen Elizabeth II passes away
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X