For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ இதுக்குப் பேர்தான் சன்ரைஸா.. மாடி வழியாக எட்டிப் பார்த்து ரசித்த கருப்புக் கரடி!

Google Oneindia Tamil News

நியூ ஹேம்ப்ஸியர்: வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள நியூஹேம்ஸ்பியரில் ஒரு ஹோட்டல் வராண்டாவில் கருப்புக் கரடி ஒன்று மாடி வழியாக சூரியோதயத்தை எட்டி பார்க்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

நியூ ஹேம்ப்ஸியரில் பிரெட்டன்வுட்ஸ் என்ற பகுதியில் ஆம்னி மவுண்ட் வாஷிங்டன் என்ற பகுதியில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. இந்த ஹோட்டலில் ஒரு கருப்பு கரடி உலவுவதை பணியாளர் சாம் கீசாமேன் பார்த்தார்.

Bear watches Sunrise from hotel

காலை 5 மணிக்கு சூரிய உதயம் ஆனது. அப்போது அந்த கரடி வெரான்டாவில் உள்ள மாடிச் சுவற்றை பிடித்துக் கொண்டு எட்டி பார்த்து ரசித்த காட்சியை புகைப்படமாக எடுத்தார்.

இந்த புகைப்படம் ஜூன் 29-ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்த பகுதியில் கரடிகளின் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருக்கும். வீடுகள், குடியிருப்பு வளாகங்களில் நுழைந்து அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் கூறும் நிலையில் இந்த கரடியின் புகைப்படம் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

English summary
A photo goes viral that a black bear watches sun rise in Veranda of Hotel near New Hampshire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X