For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன ஒரு அற்புதமான காட்சி... அமெரிக்கக் கலவரத்தைக் கலாய்க்கும் சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அதை அற்புதமான காட்சி என்று சீனாவின் குளோபல் டைமஸ் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக பைடனை முறைப்படி தேர்ந்தெடுக்கும் நடைமுறை நேற்று நடைபெற்றது.

அப்போது அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் இதுவரை நான் பேர் உயிரிழந்துள்ளனர்.

 பதவி நீக்கம்

பதவி நீக்கம்

அதிபர் டிரம்பின் தூண்டுதலாலேயே இந்த வன்முறைச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக டிரம்பை பதவி நீக்கம் செய்வது குறித்தும் அவரது அமைச்சரவை ஆலோசனை நடத்து வருகின்றனர்.

 அற்புதமான நிகழ்வு

அற்புதமான நிகழ்வு

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பல உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவத்தை அற்புதமான நிகழ்வு என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 சபாநாயகரை விமர்சிக்கும் சீனா

சபாநாயகரை விமர்சிக்கும் சீனா

சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைமஸ், கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஜனநாயகவாதிகள் நடத்திய போராட்டத்தையும் இதையும் ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ளது. அதில், "அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி ஒருமுறை ஹாங்காங் கலவரத்தை அற்புதமான காட்சி' என்று குறிப்பிட்டார். தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் சம்பவமும் அவருக்கு அற்புத காட்சியாகவே இருக்கும் என்றும் நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்

சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்

மேலும், சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவிலும் அமெரிக்கக் கலவரம் தொடர்பான செய்திகள் டிரெண்டாகி வருகிறது. ஹாங்காங்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பியத் தலைவர்கள், அமெரிக்கக் கலவரத்திற்கு எதிராக மட்டும் குரல் எழுப்புவது ஏன் என்று பலரும் அதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
China state media tabloid Global Times tweeted side-by-side photo comparisons of Hong Kong protesters occupying the city's Legislative Council Complex in July 2019 with Wednesday's Washington riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X