For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி காருக்கு டீசல் ஊற்ற வேண்டியதில்லை.. பீர் ஊற்றினால் போதும்.. நிற்காம ஓடும்!

கார்களில் டீசல், பெட்ரோல் பயன்படுத்துவதற்கு பதிலாக இனி பீர் பயன்படுத்தி ஓட்ட முடியும் என்று பிரிட்டன் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இனி காருக்கு டீசல் ஊற்ற வேண்டியதில்லை.. பீர் ஊற்றினால் போதும்.. நிற்காம ஓடும்!- வீடியோ

    லண்டன்: டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக இனி பீர் இருக்கும் என்றும் பிரிட்டன் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பியரை ஊற்றி வாகனம் ஓட்டலாம் என்று கூறுகின்றனர்.

    இதற்காக பியரில் சிறு சிறு மாற்றங்கள் மட்டும் செய்தால் போதும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதற்காக அந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

    இது எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் எரிபொருள் தேவையை தீர்க்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இது உலகின் பொருளாதாரத்தையே மாற்றும் என்றும் விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றனர்.

    மதுவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

    மதுவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

    பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிபொருட்களான டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரிபொருளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் மது வகைகளில் நிறைய சோதனைகள் செய்தனர். ஏனெனில் மதுவில் இருக்கும் எத்தனால், பியூட்டனாலாக மாறினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும்.

    தொடர் தோல்வி

    தொடர் தோல்வி

    இந்த நிலையில் இவர்களது ஆராய்ச்சி தொடர்ந்து தோல்வியில் முடிந்து இருக்கிறது. மது வகைகளில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றவே முடியவில்லை. அப்படியே மாற்றினாலும் அது வாகனத்திற்கு மிகவும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மிகவும் குறைவான திறனையே அந்த எரிபொருட்கள் கொண்டு இருக்கின்றது.

    பீரில் சோதனை

    பீரில் சோதனை

    இந்த நிலையில் விஞ்ஞானிகள் அந்த சோதனையை பீரில் செய்து முடித்து உள்ளனர். அதன்படி மற்ற எரிபொருட்டாக்களை விட பீரை கொண்டு அதிக திறன் உள்ள எரிபொருளை உருவாக்க முடியும் என்று கூறியிருக்கின்றனர். மேலும் இதை மாதிரியாக வைத்து அவர்கள் இயக்கிய வாகனமும் மிகவும் சரியாகவே இயங்கி இருக்கிறது. அதிக மைலேஜும் கொடுத்துள்ளது.

    சிக்கல் என்ன

    சிக்கல் என்ன

    தற்போது இதில் ஒரேயொரு சிக்கல் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பீர் கொண்டு இருக்கும் எத்தனால் பொருட்களை பியூட்டனாலாக மாற்றுவது மட்டும் கடினமாக இருந்துள்ளது. அதையும் விரைவில் சரி செய்துவிடுவோம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விரைவில் பீர் மூலம் இயங்கும் வாகனங்களை சாலையில் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Beer will replace diesel and petrol in future as fuel for car and bike. Britain researchers made a break through using beer as the fuel for four wheeler.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X