For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசம்.. சீன அதிகாரிகள் கவலை

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் 27 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமை மோசமாகியுள்ளதாக அந்த நகர செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Recommended Video

    China-வில் Corona Second Wave..மூடப்படும் தலைநகர் Beijing

    சீனாவில் வுகான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா நுழைய கூடாது என அந்த நாட்டு அரசு தீவிர தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டது.

    ஆனால் பெய்ஜிங்கில் ஒரு மீன் மார்க்கெட்டில் சாலமன் மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கடந்த 5 நாட்களில் 106 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    யம்மாடியோ.. 62 நாள் கொரோனா சிகிச்சைக்கு ரூ. 8.35 கோடி பில்.. ஷாக்கான அமெரிக்க தாத்தாயம்மாடியோ.. 62 நாள் கொரோனா சிகிச்சைக்கு ரூ. 8.35 கோடி பில்.. ஷாக்கான அமெரிக்க தாத்தா

    பெய்ஜிங்

    பெய்ஜிங்

    கான்டாக்ட் டிரேசிங் மற்றும் கொரோனா சோதனை மூலம் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதுகுறித்து பெய்ஜிங் நகர செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது.

    கொரோனா சோதனை

    கொரோனா சோதனை

    ஜின்ஃபாடி மார்க்கெட்டில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், மேலாளர்கள், அரசு கேன்டீன்களில் உள்ளவர்கள் ஆகியோரிடம் கொரோனா சோதனை செய்ய உள்ளோம். பெய்ஜிங்கில் ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்து வருகிறோம்.

    சோதனை

    சோதனை

    கடைகளுக்கு சென்றால் தங்களுக்கு கொரோனா பாதிக்குமோ என மக்கள் அச்சம் கொள்கிறார்கள். உள்விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு அம்சங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 8000-க்கும் மேற்பட்டோர் கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மார்க்கெட்

    மார்க்கெட்

    கடந்த மே 30-ஆம் தேதி முதல் 2 லட்சம் பேர் ஜின்ஃபாடி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்துதான் 70 சதவீத பழங்கள், காய்கறிகள் சப்ளை நடக்கிறது. இதனால் அந்த மார்க்கெட்டுக்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

    English summary
    Officials says that Beijing Coronavirus situation is extremely severe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X