For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 தியரிக்கள்.. வெறும் விபத்து கிடையாது.. வேறு ஏதோ பின்னணி.. பெய்ரூட் வெடிப்பில் விலகும் மர்மங்கள்!

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முதல்நாள் இரவு ஏற்பட்ட மிகப்பெரிய கிடங்கு வெடிப்புக்கு பின் மூன்று விதமான காரணங்கள், தியரிகள் வைக்கப்படுகிறது. இது மூன்றுமே கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஒரு இடத்தில் குண்டு வெடிக்கிறது, மிகப்பெரிய வெடிப்பு நிகழ்கிறது, பலர் இறக்கிறார்கள் என்றால் அது சாதாரண குண்டு வெடிப்பு மட்டுமல்ல, அதற்கு பின் வேறு காரணம் இருக்கும், அது ஒரு மெசேஜ்.. இது தனியார் சேனல் பேட்டி ஒன்றில் முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறியது.

லெபனான் வெடிப்பு குறித்து சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மட்டும் இப்படி கூறவில்லை, அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த லெபனான் வெடிப்பு குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். அமெரிக்காவின் முக்கிய மேஜர்களும் இந்த லெபனான் வெடிப்பு குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

லெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்லெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்

பெரிய சந்தகம

பெரிய சந்தகம

லெபனான் வெடிப்பு காரணமாக மொத்தமாக 130 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். 4500 பேர் வரை மிக மோசமாக காயம் அடைந்துள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து உள்ளனர். இன்னொரு பக்கம் அங்கு 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. லெபனானை உடைத்து போட்ட கிடங்கு வெடிப்புக்கு பின் மூன்று விதமான காரணங்கள், தியரிகள் வைக்கப்படுகிறது.

காரணம் 1

காரணம் 1

இந்த வெடிப்பிற்கு சொல்லப்படும் முதல் காரணம் கொஞ்சம் சிக்கலானது. 2005ம் ஆண்டு லெபனானின் முன்னாள் பிரதமர் ஹராரி கொல்லப்பட்டார். தற்போது குண்டு வெடிப்பு நடந்திருக்கும் அதே இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஹராரி கொல்லப்பட்டார். சிரியா மற்றும் ஈரானின் திட்டப்படி இவர் கொல்லப்பட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக லெபனானில் ஐநா விசாரணை நடத்தியது.
அதோடு இந்த கொலை காரணமாக லெபனானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

அதோடு லெபனானில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தால் அங்கிருந்து சிரியாவும் வெளியேறியது. நாளை இந்த ஹராரி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டால் அது சர்வதேச அரங்கில் சிரியா, ஈரானுக்கு சிக்கலாக முடியும். தற்போது வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பை தடுக்கும் வகையில் தற்போது அங்கு வெடிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டு இருக்கலாம், என்று கூறுகிறார்கள்.

காரணம் 2

காரணம் 2

இந்த இரண்டாவது காரணம், லெபனான் அரசு மூலம் பரப்பப்படும் காரணம் ஆகும். அதே சமயம் பெரும்பாலான மக்கள் இதை நம்பவும் செய்கிறார்கள். அதன்படி ரஷ்யாவில் இருந்து 2013ம் ஆண்டு லெபனான் கடல் வழியாக அமோனியம் நைட்ரேட், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த கப்பல் தொழில்நுட்ப கோளாறால் லெபனான் துறை முகத்திற்கு வந்துள்ளது. இதை பறிமுதல் செய்த லெபனான் கஸ்டம்ஸ் அதை பெய்ரூட் சுரங்கத்தில் வைத்துள்ளனர்.

விற்க முடியவில்லை

விற்க முடியவில்லை

6 வருடங்களாக அங்கேயே இருந்த அம்மோனியம் நைட்ரேட்டை விற்க ஆள் இல்லாமல் அந்த நாட்டு அதிகாரிகள் கஷ்டப்பட்டு உள்ளனர்.இந்த அம்மோனியம் நைட்ரேட் அங்கேயே இருந்த காரணத்தால் சிதைந்து, வெடித்துள்ளது. அந்த கிடங்கில் மொத்தமாக இருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் குவிக்கப்பட்டு, அதன் வெப்பநிலை அதிகரித்து, அது மொத்தமாக வெடித்துள்ளது என்று கூறுகிறார்கள்.

வீட்டில் கைது

வீட்டில் கைது

இந்த வெடிப்பிற்கு சொல்லப்படும் நம்ப தகுந்த காரணங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. லெபனான் சுங்கத்துறை அதிகாரிகள்தான் அந்த நாட்டிலேயே அதிக ஊழல் செய்யும் அதிகாரிகள் என்ற புகாரும் உள்ளது. தற்போது இந்த அதிகாரிகள் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அம்மோனியம் நைட்ரேட்டை முறையாக பாதுகாக்காதது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூன்றாவது தியரி

மூன்றாவது தியரி

இதில் மூன்றாவது தியரிதான் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி இந்த கிடங்கில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்தது உண்மைதான். ஆனால் இது தானாக வெடிக்கவில்லை . திட்டமிட்டு வெடிக்க வைத்துள்ளனர். அந்த கிடங்கு வெடித்தும், 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்ச்சி அலைகள் பரவியதும், 20 கிலோ மீட்டர் சேதம் அடைந்ததும் கண்டிப்பாக, சாதாரண விபத்தாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

வெடிப்பின் பின்னணி

வெடிப்பின் பின்னணி

இதை சிரியா, ஈரான், இஸ்ரேல் திட்டமிட்டு நிகழ்த்த இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதிபர் டிரம்ப் இது தொடர்பாக நேற்றே தனது சந்தேகத்தை எழுப்பி இருந்தார். இதை பார்க்க விபத்து போல தெரியவில்லை. இது வெறும் விபத்து கிடையாது. இதற்கு பின் வேறு எதோ பின்னணி இருக்கிறது என்று கூறினார். சாதரண விபத்து காரணமாக இவ்வளவு பெரிய சேதம் இருக்காது. இதனால் யார் பலன் அடைய போவது என்பதை விசாரிக்க வேண்டும், என்று ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

English summary
Beirut Blast: 3 Possible theories and some doubts on Lebonan disaster that killed 130 people so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X