For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யா அனுப்பிய கெமிக்கல்.. 12ம் எண் அறையில் நடந்த சம்பவம்.. லெபனான் வெடிப்பிற்கு முன் நடந்தது என்ன?

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த கிடங்கு வெடிப்பிற்கு பின் என்ன காரணம், எதனால் அங்கு அவ்வளவு கெமிக்கல் குவிக்கப்பட்டு இருந்தது என்றுவிவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த கிடங்கு வெடிப்பிற்கு பின் என்ன காரணம், எதனால் அங்கு அவ்வளவு கெமிக்கல் குவிக்கப்பட்டு இருந்தது என்றுவிவரங்கள் வெளியாகி உள்ளது.

பெய்ரூட் நகரில் இருக்கும் கிடங்கு ஒன்றில்தான் இந்த வெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் இந்த கிடங்கு, துறைமுகத்தில் இருந்து வரும் பொருட்களை வைப்பதற்காக பயன்படும் பகுதியாகும். இங்கு பெரிய அளவில் கெமிக்கல்களை கட்டுப்படுத்தும் வசதி எல்லாம் இல்லை.

இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு இந்த கிடங்கிற்கு அம்மோனியம் நைட்ரேட் பார்சல் வந்துள்ளது. மொத்தம் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் பார்சல் இந்த பகுதிக்கு வந்துள்ளது.

மர்ம விதைகள்.. அமெரிக்க மக்களுக்கு சீனாவிலிருந்து சென்ற பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஷாக் சம்பவம்!மர்ம விதைகள்.. அமெரிக்க மக்களுக்கு சீனாவிலிருந்து சென்ற பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஷாக் சம்பவம்!

எப்படி வந்தது

எப்படி வந்தது

இந்த பார்சல் ரஷ்யாவில் இருந்து வந்தது.லெபனான் கடல் பகுதிக்கு அருகே 2013ல் இந்த பார்சல் வந்த போது, கடலில் ஏற்பட்ட காற்று காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், லெபனான் அரசு அனுமதியோடு இந்த ரஷ்யாவின் கப்பலை இங்கே நிறுத்தி உள்ளனர். இது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்கிறார்கள். அதன்பின் இந்த கப்பலை மீண்டும் துறைமுகத்தில் இருந்து அனுப்ப லெபனான் துறைமுக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அங்கேயே வைத்தனர்

அங்கேயே வைத்தனர்

கிடங்கில் வைத்து பின் பணம் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அம்மோனியம் நைட்ரேட் விலை குறைவானது என்பதால் அதற்கு உரியவரும் (பெயர் வெளியிடப்படவில்லை) அதை உரிமை கோராமல் விட்டுவிட்டார். இதையடுத்து அதில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் வைக்கப்பட்டது. அங்கிருக்கும் அறை 12 மிகவும் பெரியது என்பதால், அங்கு மொத்தமாக 2750 அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டது.

ஆனால் அதன்பின்

ஆனால் அதன்பின்

ஆனால் அதன்பின் இந்த அம்மோனியம் நைட்ரேட்டை அங்கு யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் இதை என்ன செய்வது என்று தெரியாமல் கஸ்டம்ஸ் அதிகாரிகள் குழம்பி போய் இருக்கிறார்கள். மீண்டும் அதை ஓனருக்கே விற்க முயன்றால், அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்நாட்டு நீதிபதிகள் குழுவிற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை என்ன செய்வது என்று கேட்டு இருக்கிறார்கள்.

கடிதம் எத்தனை

கடிதம் எத்தனை

ஒருமுறை அல்ல மொத்தம் 6 முறை இது போல கடிதம் அனுப்பி உள்ளனர். 2014, 2015, 2016, 2016 (மீண்டும்), 2017, 2018 என்று ஆறு முறை கடிதம் அனுப்பி உள்ளனர். ஒவ்வொருமுறை இதை மக்களிடம் விற்றுவிடுங்கள், ராணுவத்திற்கு விற்றுவிடுங்கள், குண்டுகள் தயாரிக்கும் அதிகாரபூர்வ நிறுவனங்களுக்கு விற்று விடுங்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒருமுறை கூட அம்மோனியம் நைட்ரேட்டை வாங்க யாருமே முன் வரவில்லை.

சிக்கல்

சிக்கல்

கடைசியாக எழுதிய கடிதத்தில், அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை யாரும் வாங்கவில்லை. இதை பாதுகாப்பாக வைக்கும் வசதி எங்களிடம் இல்லை. இதனால் இதற்கு தக்க வழியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நீதிபதிகள் குழுவில் இருந்து பதில் வரவே இல்லை. இதன்பின் அந்த அம்மோனியம் நைட்ரேட் விஷயத்தை அப்படியே கஸ்டம்ஸ் குழுவும் மறந்துவிட்டது.

விதி விளையாடியது

விதி விளையாடியது

இங்குதான் விதி விளையாடி இருக்கிறது. அம்மோனியம் நைட்ரேட் என்பது மொத்தமாக குவிக்கப்பட்டு இருந்தால் வெப்பத்தை வெளியிடும். அதேபோல் வருடம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மொத்தமாக இந்த அம்மோனியம் நைட்ரேட் நெருப்பை உருவாக்கும். தீயே இல்லாமல் நெருப்பை உருவாக்கும் சக்தி கொண்டது இந்த அம்மோனியம் நைட்ரேட். அந்த கிடங்கில் இப்படித்தான் மொத்தமாக அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

12ம் எண் அறை

12ம் எண் அறை

சரியாக 12ம் எண் அறையில் அம்மோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் 6 வருடம் போனதாலும், மொத்தமாக ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாலும் அழுத்தம் அதிகரித்து வெப்பம் வெளியாகி உள்ளது. இந்த வெப்பமே வெடிப்பிற்கு காரணமாக மாறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த 12ம் எண் அறையில் இருந்த கெமிக்கல் வெடித்துதான் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தற்போது வல்லுநர்கள் குழு தெரிவிக்கிறது.

English summary
Lebanon Beirut Blast: How Ammonium Nitrate came to the warehouse and become the source of the disaster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X