For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடிக்க போகிறது.. பெய்ரூட்டுக்கு முன்பே தரப்பட்ட வார்னிங்.. தெரிந்தும் மௌனம் காத்த தலைகள்.. பின்னணி!

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனானில் பெய்ரூட் கிடங்கு மொத்தமாக வெடிக்கும், இதனால் பெய்ரூட் மொத்தமாக நொறுங்க கூட வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு முன்பே வார்னிங் சென்று உள்ளது.

Recommended Video

    Chennai Port-ல் 6 ஆண்டுகளாக இருக்கும் Ammonium Nitrate | Oneindia Tamil

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முதல் நாள் இரவு ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் பாதிப்பு இன்னும் போகவில்லை. அங்கு இன்னும் மீட்பு பணிகளை செய்ய முடியாமல் அரசு திணறி வருகிறது . இதுவரை 130 பேர் இந்த பயங்கர வெடிப்பில் பலியாகி உள்ளனர்.

    இதுவரை காயம் அடைந்த 4000 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தமாக இதுவரை 3 ஆயிரம் பேர் வரை இந்த வெடிப்பில் காணாமல் போய் இருக்கிறார்கள். இவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    முன்பு vs இப்போது.. வெளியான பெய்ரூட் புகைப்படங்கள்! வெடி விபத்தால் ஒரு நகரமே இப்படி மாறிப்போகுமா OMGமுன்பு vs இப்போது.. வெளியான பெய்ரூட் புகைப்படங்கள்! வெடி விபத்தால் ஒரு நகரமே இப்படி மாறிப்போகுமா OMG

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த வெடிப்பிற்கு என்ன காரணம் என்று ஏறக்குறைய தெரிந்துவிட்டது. அங்கு இருக்கும் கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த அம்மோனியம் நைட்ரேட் ரஷ்யாவில் இருந்து வந்தது ஆகும். ரஷ்யாவில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்று செய்த ஏற்றுமதியை, பறிமுதல் செய்து, லெபனான் அரசு இங்கே பாதுகாத்து வந்தது.

    பேராசை

    பேராசை

    அதிக விலைக்கு விற்கலாம் என்று ஆசைப்பட்டு அம்மோனியம் நைட்ரேட்டை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் இதை யாரும் வாங்காத காரணத்தால் கிடங்கிலேயே முடங்கி இருக்கிறது. இதை ஒரே இடத்தில குவித்து வைத்து இருந்த காரணத்தாலும், ஆறு வருடமாக ஒரே இடத்தில் இருந்த காரணத்தாலும் வெடித்து இருக்கிறது. அம்மோனியம் நைட்ரேட் காலம் காலம் செல்ல செயல் நெருப்பே இல்லாமல் வெடிக்கும் தன்மை கொண்டது ஆகும்.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு நேரடியாக 6 மாதங்களுக்கு முன் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கிடங்கில் இருக்கும் அம்மோனியம் நைட்ரேட் மோசமான நிலையில் உள்ளது . அம்மோனியம் நைட்ரேட் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டே வருகிறது . இப்படியே விட்டால் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிவிடும். அதனால் மொத்தமாக பெய்ரூட் நகரமே வெடித்து சிதற வாய்ப்புள்ளது.

    அவசியம் தேவை

    அவசியம் தேவை

    உடனே இதை அப்புறப்படுத்த வேண்டும். இப்போதே அம்மோனியம் நைட்ரேட் சிதய தொடங்கி உள்ளது. நேரம் ஆக ஆக இந்த அம்மோனியம் நைட்ரேட் சிதைந்து வெடிக்கும் தன்மைக்கு மாறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு நீதிபதிகள் குழு மற்றும் பிரதமரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு கடிதங்களை எழுதியுள்ளனர். ஆனால் எதற்கும் பதில் இல்லை .

    வேண்டும் என்றே

    வேண்டும் என்றே

    இப்படி கடிதம் எழுதியும் அதன் மீது அந்நாட்டு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வேண்டும் என்றே அவர்கள் இதில் அமைதி காத்தாக கூறப்படுகிறது. காலுக்கு அடியில் வெடிகுண்டு இருப்பது தெரிந்தும் அவர்கள் வேண்டும் என்றே அமைதி காத்து இருக்கிறார்கள். லெபனான் ஊழல் மலிந்த தேசம். இந்த ஊழலும், அதிகாரிகளின் அலட்சியமும், அரசின் நேரடி அலட்சியமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

    English summary
    Beirut Blast: Officials warned the government about Ammonium Nitrate 6 months before the disaster.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X